Saturday, August 14, 2010

Raging bull: வன்முறையின் அழகியல்

Cinema is the most beautiful fraud in the world  
- Jean-Luc Godard

எது நல்ல சினிமா? எது நல்ல இலக்கியம்? எது நல்ல இசை? எது நல்ல பொழுதுபோக்கு?. (இந்த “நல்ல” வார்த்தைய நான் எப்பவுமே கணக்குல எடுக்கறதில்ல-அது Relative termமா இருக்கறதால. ஆனா வேறு வார்த்தை இல்லாததால அத உபயோகப்படுத்த வேண்டியிருக்கு) இந்த கேள்வி அடிக்கடி எனக்குத் தோன்றும். இத்தனை வருஷங்களா பா-கே-படித்ததுல ஒரு மார்க்கமா புரிஞ்சு வெச்சுருக்கேன். என்னளவுல இதைத்தான் அளவுகோலா வெச்சுருக்கேன்.

நல்ல சினிமா-நான் பார்க்குற சினிமா என்னை பாதிக்கணும். பாதிப்புனா நிஜ வாழ்கையில் இருக்கும் சோகங்களையும், ஏமாற்றங்களையும் மட்டும் காட்டுகிற பாதிப்பில்ல.(பல ஈரானியன் சினிமாக்கள்). (இதை ஓவியங்கள், இலக்கியம் எதுக்கு வேணாலும் பொருந்திப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். அப்படிப்பார்த்தா ஓவியங்கள்ள வான்காவை மட்டுமே ரசிக்க முடியும்னு தோணுது). திரையில வர கதாபாத்திரங்கள் ஒரு சூழ்நிலையில மாட்டிக்கிட்டு பயந்தா நானும் பயப்படனும்(The Shining). ஒரு பரபரப்பான க்ரைம் சீன்ல இருந்தா நானும் அந்த பரபரப்பை உணரனும் (The Departed). ஒரு அமானுஷ்ய விஷயம் நடக்குததுன்னா அது எனக்கு நடக்கிறது மாதிரி தோணனும்(2001: A Space Odyssey). கதாபாத்திரங்கள் சிரிச்சா நானும் எனைமறந்து சிரிக்கணும். இந்த மாதிரி பல “ணும்”கள் இருக்கிற சினிமாவே என்னளவுல நல்ல சினிமா. சுருக்கமா சொன்னா I dont want to watch a movie. I want to feel the movie i watch. யோசிச்சுப்பார்த்தா எவ்வளவு ஏற்றதாழ்வுகள்-பணம்,ஜாதி,மதம்...-இருந்தாலும் தியேட்டர்ல நம்ம பக்கத்தில் யார் உங்கதிருக்கான்னு தெரியாது. அப்படியே ஏதாவது யோசிச்சாலும் படம் போட்டவுடன் எல்லோருமே அதுலயே மூழ்கிறோம். ஏனா படிப்பதை விடவும், கேட்பதை விடவும் பார்ப்பது எப்போதுமே வீரியமிக்கதாகவே இருக்கும் என்பது என் எண்ணம். பல சினிமாக்கள் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நிறைய மாற்றங்களை-நல்ல விதமாகவும், எதிர்மறையாகவும்-ஏற்படுத்தியிருக்குங்கிறத நாம் அனைவரும் அறிவோம் (Birth of a Nation, The Battle of Algiers, Fahrenheit 9/11, Triumph of the Will-Hitler’s Propaganda). இத்தனை சக்திவாய்ந்த ஊடகத்தை நம்ம ஆட்கள் பயன்படுத்துற விதம் தான் நிறைய பேருக்கு எரிச்சலூட்டுது. நா கூட ஆரம்பத்துல நெனப்பேன், என்னடா ஆ..வு..னா-உலக சினிமா அது இது சொல்றாங்களேனு, நம்ம ஊரப் பார்த்தா. இங்க வெளியாகிற 100 படங்கள்ள, 95 படங்கள் ஹீரோவுடய சொந்த செல்வாக்க பெருக்கவும், மத ரீதியா-ஜாதி ரீதியா ஏதாவது பிட்டு போட்டு விடவும், பொழுது போக்குங்கிற பெயரில சகிக்க முடியாத காட்சிகளுடனும் தான் ரீலீஸ் ஆகுது. நல்ல பொழுதுபோக்கு படங்களுக்குக்கான முயற்சிகளும் இருக்கத்தான் செய்யுது-ஆனா அளவுல சொற்பம்.(இதெல்லாம் எல்லாருக்கும் எப்பவோ தெரியும் சொல்றீங்களா, ஆனா இப்பதான நான் ப்ளாக் எழுதுறேன்...வேற வழியில்ல.நான் சொல்லித்தான் தீருவேன்).


எதுக்கு இத்தன பீடிகைனா, எல்லாம் இந்த படத்தினாளையும், அதன் டைரக்டராலையும் வந்தது. ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் மறுபடியும் போன வாரம் டிவி பார்த்ததுனால வந்த வினை. இருந்தாலும் இந்தப்படத்தை தான் என் முதல் பதிவா போடலாம்னு நெனச்சிருந்தேன். அந்தப்படத்த எல்லோரும் பல தடவ பார்த்திருப்போம். இது வந்து தங்கச்சுரங்கத்தில் வெள்ளிக்காசு விற்பதைப் போலத்தான்  இந்தப்படத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒவ்வொரு முறை இந்தப்படத்தை பார்க்கும்போதும் முதல்முறை பார்க்கும்போது இருந்த impact அப்படியே இருக்கு. நா 5 வருஷம் முன்னாடி காலேஜ் First yearல (Z-Studio) இந்தப் படத்தப் பார்த்தேன். அப்ப எனக்கு ஸ்கார்சேசி இவ்வளவு பெரிய இயக்குனர், டீ நீரோ இத்தனை அட்டகாசமான நடிகர் என்பதெல்லாம் தெரியாது. ஆனா படம் ஆரம்பிச்சதிலயிருந்து இங்கிட்டு அங்கிட்டு பார்வைய திருப்ப முடியல. என்ன ஒரு making, acting, narration. B&W வேற எப்பயுமே அதுல depthness அதிகமா இருக்குற மாதிரி எனக்கு தோணும். இந்தப்படம் பிடித்ததற்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

கதைன்னு பார்த்தா வாழ்ந்து கெட்டவனின் கதைதான். பெரும்பாலானவர்களைப் போல் அதற்கு அவனே தான் காரணம்.

நியூயார்க்,1964:


ஒரு பெருத்த உடல் கொண்ட ஒருவர், பாரில் பேசுவதற்காக ஷேக்ஸ்பியரின் கவிதையை சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த கவிதை “That’s Entertainment” என்ற நோட்டுடன் முடிகிறது. யார் இவர்? ----அப்படியே கட்----

ஒரு குத்துச்சண்டை போட்டி,1941:


அதே “That’s Entertainment” வார்த்தைகளுடன் ஜாக்-லே-மோட்டோ பங்குபெறும் குத்துச்சண்டை போட்டி கண்முன் விரிகிறது. சரியான சண்டை.(குத்து ஒவ்வொன்றும் நமது முகத்திலேயே விழுவதைப் போல் கண்டிப்பாக அனைவரும் உணர்வோம். அற்புதமான ஒளிப்பதிவு.) இந்த போட்டில ஜாக் தோற்றதாக அறிவிக்கப்படுகிறான். இங்க ஆரம்பிக்கிற ஜாக்குடைய வாழ்க்கை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்குது. ஒரு 15 வயது பெண்ணை சந்தித்து அவளை மணக்கிறான். அவள் மீது மிகுந்த பிரியத்துடன் இருக்கிறான். பின்பு அவளது நடத்தையில் சந்தேகம் கொண்டு-தனக்கு பல வகையிலும் ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்தா தம்பி ஜோயி உடன் அவளை தொடர்ப்புபடுத்தி-அதற்காக இரண்டு பேரையும் கண்முடித்தனமாக தாக்குகிறான். இதற்க்கிடையே நினைத்தது போலவே middleweight champion ஆகவும் வெற்றி பெறுகிறான். இருந்தாலும் மனதளவில் மிகுந்த குழப்பவாதியாக, சுயகட்டுப்பாடில்லாமல் மூர்கத்தனமான நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுபவனாக மாறுகிறான். கடைசியாக 1951ல் யாரை பல முறை விழ்தியிருந்தானோ- Sugar Ray Robinson- அவனாலேயே கடுமையான முறையில் தாக்கப்பட்டு, தோற்கடிக்கப்படுகிறான்.பட்டத்தையும் இழக்க நேரிடுகிறது.

1956:


குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றதும் சிறிய கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறான். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சினையால் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே மனைவி வேறு விவாகரத்து கோருகிறாள். பெயிலில் எடுக்க காசில்லாமல், தன் விருப்பத்திற்குரிய Middleweight Championship Beltடிலிருந்து, அதை உடைத்து நகைகளை எடுத்தும் வெளியே வர இயலாமல் போகிறது. யாரும் இல்லாமல் சிறையில் இருக்கும் பொழுது இதுவரை நடந்தவற்றை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறான்.

நியூயார்க்,1964:


ஒரு பெருத்த உடல் கொண்ட ஒருத்தர், பாரில் பேசுவதற்காக ஷேக்ஸ்பியரின் கவிதையை கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த கவிதை “That’s Entertainment” என்ற நோட்டுடன் முடிகிறது. யார் இவர்? அவர்தான் ஜாக்-லே-மோட்டோ. உருவம் உப்பிப்போய் இது போன்ற வேலைகளைச் செய்தே இதுவரை காலந்தள்ளி வந்திருக்கிறார். ஒரு ஆள் வந்து எல்லாம் தயாராக இருப்பதாய் கூறிச் செல்கிறான். ஜாக் வருவதாகக் சொல்லி எழுந்திருக்கிறார். சுவற்றில் தெரியும் தன் நிழலைப் பார்க்கிறார். அது பழைய விசயங்களை அவருக்கு ஞாபகப்படுத்த, எதையோ நினைத்தவராக “I'm the boss, I'm the boss, I'm the boss, I'm the boss, I'm the boss” என்று கூறிக் கொண்டே குத்துச்சண்டை இடுவதுடன் படம் நிறைவடைகிறது. என்னதான் காளை ஒடுங்கினாலும் சீற்றம் குறையாதுதானே...

Robert De Niro:



நா என்ன சொல்றது. இவர பத்திதான் எல்லோருக்குமே தெரியுமே. எனக்கு பிடித்த 5 நடிகர்களைக் கேட்டா கண்டிப்பா அதுல இவரும் ஒருத்தரா இருப்பார் (பல பேருக்கும் அப்படித்தான்னு நெனைக்கிறேன்). இவருதான் ஜாக்-லே-மோட்டோ எழுதிய புத்தகத்தை படிச்சிட்டு அந்த கதாபாத்திரத்தால ஈர்க்கப்பட்டு அதை ஸ்கார்சேசியிடம் கொடுக்கிறார். (இங்கயும் இப்படி நிலைமை வந்தா எப்படியிருக்கும்). இதற்காக அவர் 70 பவுண்ட் எடையை கூட்டுனது, போதைப்பொருள் பழக்கத்தால verge of deathல இருந்த ஸ்கார்சேசியிடம் இந்த படத்த இயக்குமாறு சொல்லி தூக்கி விட்டது, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன் (உபயம்: IMDB, Wikipedia). இந்த படத்துக்காக இவர் பட்ட கஷ்டத்தை படத்துல எங்கயும் காமிச்சுக்க மாட்டார்.இவர்ட எனக்கு பிடிச்சது என்னன்னா எங்கயுமே டீ-நீரோங்குற மனிதர் கண்ணுக்கு தென்படமாட்டார். அந்த கதாபாத்திரம் மட்டுமே நமக்கு தெரியும். இந்தப்படத்திளும் மனைவியுடன் சண்டை போடும் காட்சிகளாகட்டும், பாக்ஸிங் காட்சிகளாகட்டும் இது எல்லாத்திலேயும் இதைப் பார்க்கலாம்.


கொஞ்ச கொஞ்சமா mental breakdown ஆகிற ஒரு ஆள இவரைவிட தத்ருபமாக வேற யாராலயாவது வெளிப்படுத்த முடிமாங்கிறது சந்தேகமே. எனக்கு மிகவும் பிடித்த காட்சி சிறையில் இருக்கும் பொழுது உடைந்து போய் அழுதுகொண்டே “Why? Why? Why?Why'd you do it? Why? You're so stupid...I'm not an animal” இதைச் சொல்லும் காட்சியும், கடைசியாக “I'm the boss, I'm the boss” என்று சொல்லிக்கொண்ட குத்துச்சண்டை செய்யும் காட்சியும்தான். முகத்தை கூட காட்டாமல் இந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்தியதை..சத்தியமா நெனச்சு கூட பார்க்க முடியால. அந்த கதாப்பாத்திரத்தின் மூர்க்கம், கோபம், வெற்றி மிதப்பு எல்லாத்தையும் ஒரு பார்வையிலேயே புரிய வெச்சிடுவார்.

Martin Scorsese:



இந்தப் படத்தை எடுக்கைல இவரு நிலைமை என்னன்னு எல்லோர்ருக்கும் தெரியும். இருந்தாலும் இதை தனக்குத்தானே ஒரு சவாலா எடுத்துக்கிட்டு செஞ்சிருக்கார். ஏன் இந்த நல்ல சினிமா பேச்ச எடுத்தேன்னா...இவருடைய எல்லாப் படங்களையும் பார்க்கிறவுங்க தன்னை அறியாமலே அந்த கதைக்களத்துக்குள் போயிருவாங்க. எனக்கு பல தடவ நடந்திருக்கு. அது Taxi driver, Kundun, King of Comedy (டீ நீரோவின் மற்றொரு பிடித்த படம்), Briging out the dead, Gangs of New york, The Departed ஏன் இப்ப வந்த Shutter Island வரைக்கும் இவருடைய எல்லா படங்களும் அப்படித்தான் இருக்கு. இதற்கெல்லாம் அசாத்தியமான சினிமா அறிவும், அது மேல அளப்பரிய நேசிப்பும் வேணும். ரெண்டாவது, இவருக்குனு சில ட்ரேட்மார்க் மேக்கிங் ஸ்டைல் இருக்கு. எடிட்டிங், குறிப்பா ஜம்ப் கட்ஸ்-வேகமான கேமரா அசைவுகள்-செமத்தியான பின்னணி இசை-க்ளோஸ் அப் ஷாட்ஸ். இந்தப்படத்தில இது அத்தனையும் ஒண்ணா இருப்பதைப் பார்க்கலாம். என்ன மாதிரி எடிட்டிங்டா சாமி...வாய்பேயில்ல. குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட காட்சிகள்ல point of view ஷாட்ஸ், இதயத் துடிப்புக்கு ஏத்த மாதிரியான காட்சிகள்னு பார்க்கிறவங்க முகத்தில ஒவ்வொரு குத்தும் விழுவதைப் போலயே இருக்கும். நல்லா சவுண்ட் வெச்சு பார்த்தா இன்னும் நல்லாயிருக்கும்.


ஏன் மெமெண்டோவை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்? ஏன் சைக்கோ இத்தனை ஆண்டுகள் கழித்தும் பயமுறுத்துகிறது? ஏன் பைசைக்கிள் தீஃப் இப்பவும் மனதை கணக்கச் செய்கிறது? பார்க்கிறவர்களையும் ஒரு கதாபாத்திரமாக மாற்றும் வல்லமை இப்படங்களுக்கு உண்டு.இப்படி பார்க்கிறவங்கள மொத்தமா தன்வசப்படுத்தும் சினிமாதான் என்னளவில் நல்ல சினிமா. ஒரு மூணு மணி நேரம் நம்மள அறியாமே அந்த கதைக்குள்ள போயி நாம ஏமாறணும். Thats why Cinema is the most beautiful fraud in the world. (சுறா வகையான பாதிப்பை சொல்லல.அப்படி ஓரளவுக்கு சமீபத்துல நான் ஏமாந்த தமிழ் படம்னா “அஞ்சாதே”வை சொல்லலாம்).சில பேருக்கு இந்தப்படம் பிடிக்காம இருக்கலாம் (சில பேருக்கு நா இப்படி மொக்கையா எழுதுனதுனால கூட பிடிச்சதும் பிடிக்காம போக வாய்ப்பிருக்கு). இன்னம் ஒரு 50 வருசங்கழிச்சு (என் 60வது வயசுல) தூக்கத்தில எழுப்பி உனக்கு பிடிச்ச ஒரு ஐந்து படம் சொல்லுன்னு கேட்டாக்கூட இதயும் ஒண்ணா சொல்லுவேன்.
Facebookers..

44 comments :

  1. கொழந்த.. ரேஜிங் புல், அட்டகாசமான ஒரு படமாச்சே ! எனக்கு ரொம்பப் புடிச்ச படங்கள்ல ஒண்ணு.. ;-)

    எது நல்ல படம்? இந்த விஷயத்தில், என்னோட பெர்சனல் கருத்து என்னன்னா, என்னைப் பொறுத்த வரை, எனக்கு எல்லாமே நல்ல படம் தான். மசாலா, ஆர்ட், போர்னோ.. இப்புடியெல்லாம் என்னால படங்களைப் பிரிச்சி, அதுல கொதார் (Godard) படம் பெஸ்ட், ஸ்கார்ஸெஸியா.. ஓகே, கெட் கார்ட்டரா... தூ. இப்புடியெல்லாம் என்னால சொல்ல முடியாது ;-)

    இது என்னோட சொந்தக் கருத்து ;-)

    //திரையில வர கதாபாத்திரங்கள் ஒரு சூழ்நிலையில மாட்டிக்கிட்டு பயந்தா நானும் பயப்படனும்//

    இது தான் ‘Suspension of Disbelief'. படத்தைப் பார்க்கும் மக்கள், Disbeliefஃபை கைவிட்டுரணும். படத்தோட ஒன்றிடணும். அதான் ஒரு படத்தின் வெற்றி... இது, Syd Field சொன்னது..

    போஸ்ட் சூப்பர் !

    ReplyDelete
  2. பை த பை, மீ த ஃபர்ஸ்ட் அண்ட் செகண்ட் ஆல்ஸோ ;-)

    ReplyDelete
  3. //தூக்கத்தில எழுப்பி உனக்கு பிடிச்ச ஒரு ஐந்து படம் சொல்லுன்னு கேட்டாக்கூட இதயும் ஒன்னா சொல்லுவேன்.//

    மீதி நாலுப் படத்தை சொல்லுங்கன்னா நீங்க மாட்டிக்குவீங்களே.

    [தல.. இப்பத்தானே ஏரியாவுல வந்திருக்கோம். கூடிய சீக்கிரம்.. நீங்களும் கமெண்ட்டை மூடினாலும் ஆச்சரியமில்லை.:) :)]

    ===

    எனக்கு இந்தப் படத்தை பார்க்கும் போது வந்த ஆச்சரியத்தை விட, இதோட DVD director 's comment-ல மார்ட்டின், சீன் பை சீனா... அந்தக் காட்சி ஏன் வந்தது, ஏன் கட் பண்ணினாங்க, ஒவ்வொரு காட்சியும் எத்தனை ஃப்ரேம்ல ஷூட் பண்ணினாங்க, அது எதுக்காகன்னு..

    மாஞ்சி மாஞ்சி சொல்லிகிட்டே இருப்பாரு. இத்தனை வருசமாகியும், இதை இந்த வயசில் நினைவு வச்சி சொல்லனும்னா..., இந்தப் படத்தை அவரு எப்படி ஃபீல் பண்ணி உருவாக்கியிருக்கனும்?

    ReplyDelete
  4. சினிமாக்காதல்ருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ரைட்டு.. இதை 31-ஆவது கமெண்ட்டா சேர்த்துட வேண்டியதுதான். :)

    ReplyDelete
  6. @கருந்தேள் கண்ணாயிரம்
    ணா..நான் சொல்ல வருவதும் அதேதான்.
    //நா 5 வருஷம் முன்னாடி காலேஜ் First yearல (Z-Studio) இந்தப் படத்தப் பார்த்தேன். அப்ப எனக்கு ஸ்கார்சேசி இவ்வளவு பெரிய இயக்குனர், டீ நீரோ இத்தனை அட்டகாசமான நடிகர் என்பதெல்லாம் தெரியாது//
    எனக்கு அவுங்களப் பத்தி தெரியாது. ஆனாலும் படம் ரொம்ப பிடிச்சிருந்தது.
    ஆனாலும் தவிர்க்க முடியாம சில படங்களை ஒரு Prenotionனோடதான் பார்க்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  7. @ஹாலிவுட் பாலா
    தல.. சீரியஸா நீங்க சீக்கிரமே ஒரு சீரியஸான ஒரு பதிவப் போடுங்க. உங்கள நம்பியிருக்குற ஜனங்களுக்கு என்ன பண்ணப் போறீங்க?

    ReplyDelete
  8. @சி.பி.செந்தில்குமார்
    நன்றி பாஸ்..

    ReplyDelete
  9. @கருந்தேள் கண்ணாயிரம்
    //இது தான் ‘Suspension of Disbelief'. படத்தைப் பார்க்கும் மக்கள், Disbeliefஃபை கைவிட்டுரணும். படத்தோட ஒன்றிடணும். அதான் ஒரு படத்தின் வெற்றி... இது, Syd Field சொன்னது//

    நா சொன்ன கருத்தை ராவோட ராவா படிச்சிட்டு Syd Field ட்விஸ்ட் பண்ணி சொல்லிருக்கார்.(உங்களுக்கு எப்படி அதுக்குள்ள தெரிஞ்சுது. உங்களுக்கு தெரிஞ்சவரா?) இவர் மேல வழக்கு பதிய வழியிருக்கா?

    ReplyDelete
  10. இது டெம்ப்ளேட் பின்னூட்டமோ, அட்டெண்டன்ஸ் பின்னூட்டமோ அல்ல... :)

    @பாலா, இதை 32-வதா போட்ருங்க.. :)

    ReplyDelete
  11. ஏம்பா கொழந்த... ஏதோ கொழந்த மாதிரி பிக்ஸார் படம் பாத்திருப்ப போலன்னு நினைச்சா, சில பல R ரேட்டட் படமெல்லாம் பாத்திருக்க போல...

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. @ஜெய்
    என்ன...இது R ரேட்டட் படமா? அது கூட தெரியாத அப்பாவி கொழந்தையா இருக்கேன் பாருங்க

    ReplyDelete
  14. கொழந்த,
    இன்னா படம்,இன்னா படம்
    ஒரு பாத்திரமாக மாறுவதுன்னுறது என்னான்னு இந்த படத்துல டிநீரோகிட்ட கத்துக்கனும்,செம படம்,செம விறுவிறு.
    இந்த படம் வராட்டி மார்ட்டின் போதைபேஷண்டாவே செத்திருக்கவேண்டியது.அருமையான நட்புக்கு மார்டினும் டிநீரோவும் சிறந்த எடுத்துக்காட்டு.விளைவும் இப்படம்.நல்ல விமர்சனம் நண்பா.

    ReplyDelete
  15. @கீதப்ப்ரியன்
    பாஸ்..போன பதிவின் கமென்ட் பார்த்தீங்களா

    ReplyDelete
  16. @கீதப்ப்ரியன்
    பார்திட்டீங்களா.. நா அதைப் பார்க்கல.
    ,பின்னுட்டமே ஒரு பதிவளவிற்கு போயிருச்சு. ஏன் அடிக்கடி ஆளு abscond ஆயிறீங்க

    ReplyDelete
  17. கொழந்த,
    உங்கள நான் ஃபாலோ பண்ணி தொடர்ந்து வருவதற்கு காரணமே உங்க நல்ல எழுத்துதிறமையும்,பாசாங்கின்மையும்தான்.கீப் இட் அப்.இதை தமிலிஷ்ல இணையுங்க,ஓட்டு எல்லாம் வேணாம்னு சொல்லாதீங்க,இன்னும் ஒருவருஷம் கழிச்சி சொல்லுங்க,சரியா.நீங்க மட்டும் பதிவு போட்டவுடனே 100பேருக்கு மெயில் அனுப்பி சேட்டிங்ல ஓட்டு கேட்டிருந்தா எங்களுக்கு இரிடேஷனா இருந்துருக்கும்,ஆனா செய்யலை,நல்ல பண்பு.அதுவும் நீங்க இந்த ஐஎம்டிபி கருமத்த பொருட்டா மதிக்காததும் நல்ல பாங்கு,ஏன்னா ஐஎம்டிபில 250ஐவிட அதில் இடம்பெறாத அநேக படம் சூப்பராயிருக்கும்.எனக்கு சுமார் 1000 படம் அப்புடி பிடிக்கும்.கலக்குங்க.

    ReplyDelete
  18. எனக்கு இங்க வீட்டுல நெட்பிராபளம்.சரியான பின்னே பின்னூட்ட அதகளம் தான்

    ReplyDelete
  19. //நீங்க மட்டும் பதிவு போட்டவுடனே 100பேருக்கு மெயில் அனுப்பி சேட்டிங்ல ஓட்டு கேட்டிருந்தா எங்களுக்கு இரிடேஷனா இருந்துருக்கும்,ஆனா செய்யலை,நல்ல பண்பு.அதுவும் நீங்க இந்த ஐஎம்டிபி கருமத்த பொருட்டா மதிக்காததும் நல்ல பாங்கு,ஏன்னா ஐஎம்டிபில 250ஐவிட அதில் இடம்பெறாத அநேக படம் சூப்பராயிருக்கும்.எனக்கு சுமார் 1000 படம் அப்புடி பிடிக்கும்.கலக்குங்க. //

    இதை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, புள்ளிக்குப் புள்ளி, ஸ்பேஸ்கு ஸ்பேஸ் ஆமோதிக்கிறேன் ;-)

    ReplyDelete
  20. எலேய் பசங்களா.. பாவம்யா.. கொழந்த.

    கொழந்த.. இந்த கார்த்திக்கேயன் சொல்லுறதை கேக்காதீங்க. இந்த இண்டலி, சுண்டெலியெல்லாம் வேணாம். சொன்னா கேளுங்க. அனுபவஸ்தன் சொல்லுறேன்.

    ReplyDelete
  21. @கீதப்ப்ரியன்
    //நீங்க மட்டும் பதிவு போட்டவுடனே 100பேருக்கு மெயில் அனுப்பி சேட்டிங்ல ஓட்டு கேட்டிருந்தா//
    (இது எனக்கு தெரியாம போச்சே..)
    ணா..அதான் இன்ட்லி பட்டைய வெச்சுருக்கேனே..
    இருந்தாலும் அக்கறையா சொல்றதுக்கு நன்றி.

    ReplyDelete
  22. @கருந்தேள் கண்ணாயிரம்
    போன பதிவுல போட்ட பின்னூட்டத்திற்கே நீங்க தான் காரணம். நன்றி பாஸ்.

    ReplyDelete
  23. @ஹாலிவுட் பாலா
    ணா..நான் ஓட்டுகளைப் பத்தி ரொம்ப யோசிக்காட்டியும், ஒரு ஆர்வத்தில இன்ட்லி பட்டைய சேர்த்துட்டேன். அது ஓடுற வரைக்கும் ஓடட்டுமேன்னு பார்க்கிறேன்.
    (இந்த பின்னூட்டங்களை ஒரு வேலை படித்தீர்களானால், A Clockwork Orange,Waltz with Bashir, Born into brothels etc.. போன்ற பதிவுகளை தயவுசெய்து தொடருங்கள். இப்ப முடியாத சூழ்நிலை இருந்தாலும், சீக்கரமா ஆரம்பிக்க முயற்சிசெய்யுங்கள் )

    ReplyDelete
  24. குழந்தை பாபப் விண்டோவுக்கு மாத்திட்டேங்களே?கமெண்ட் போடவே கடுப்பாருக்கும்.நான் கமெண்ட் போடுவதற்குள் தாவு தீர்ந்துடும்.

    ReplyDelete
  25. @குழந்தை
    தல் ஹாலிபாலியை மற்றும் எல்லா உலகசினிமா மோகிகளை ஜயமோகன் கலாய்ச்சுட்டார்.எப்படியா?
    அதாவது அவர் குறிப்பிட்ட இரண்டு பதிவர்கள் தவிர அத்துனை பேரும் மூளைச்சிலும்பல்களுடன் உலகசினிமா எழுதும் தற்குறியாம்

    http://www.jeyamohan.in/?p=7563

    இந்த ஆளு ஊமைகுசும்புக்கு பேர்போன ஜாதிவெறியர்.தூக்கம் வராம இருந்தா படிங்க,சொக்கும்

    ReplyDelete
  26. நண்பரே,

    படிப்பதைவிட வீரியம்மிக்கதாக சினிமாவை என்னால் காணமுடியவில்லை :) ஆனால் சிறப்பான நடையில் உங்கள் பதிவை சுவையாக வழங்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  27. @கனவுகளின் காதலன்
    நண்பரே..
    எழுதப் படிக்க தெரியாதவரால் காட்சி வழியாகக் கூட புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். எனக்கு ஜப்பானிஸ் மொழி தெரியாது. ஆனா குரசாவா படங்கள் மூலமா அவுங்க பழைய வாழ்க்கை முறையை ஓர் அளவிற்கு புரிஞ்சுக்க முடியுதே. நா இந்த contextல தான் சொல்ல வரேன்.

    ReplyDelete
  28. நண்பரே,

    நிச்சயமாக நீங்கள் கூறுவதுபோல் திரைப்படத்தை புரிந்து கொள்ள எழுதப் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது திரைமொழி மற்றும் படைப்பு இயங்கும் மொழி அறிந்திருப்பது போதுமானதே. நான் கூற விரும்பியது என்னவென்றால் ஒரு புத்தகத்தின் வழி காட்சிகளையும் உணர்வுகளையும் நானே சிருஷ்டித்துக் கொள்ளும் அனுபவம் எனக்கு கிடைக்கிறது என்பதையும் அதை நான் சினிமா அனுபவத்தைவிட அதிகமாக கொள்கிறேன் என்பதையுமே.

    ReplyDelete
  29. கனவுகளின் காதலன்..
    நண்பரே...
    முற்றிலும் ஆமோதிக்கிறேன். சினிமால நாம என்ன கற்பனை செய்யனும்கிறத அந்த படமே தீர்மானிச்சுருது. உண்மை.

    ReplyDelete
  30. // இப்ப முடியாத சூழ்நிலை இருந்தாலும், சீக்கரமா ஆரம்பிக்க முயற்சிசெய்யுங்கள் //

    முடியாம என்ன சூழ்நிலைங்க. அதெல்லாம் தாண்டியாச்சி. இப்ப எழுத பிடிக்க மாட்டேங்குது. ஆனாலும் ஏன் இத்தனை பேர் இன்னும் என்னை நம்பறீங்கன்னுதான் காரணம் தேடிகிட்டு இருக்கேன். :) :)

    ReplyDelete
  31. @ஹாலிவுட் பாலா
    பாஸ்.. உங்க பதிவின் கமென்ட்டை பார்க்கவும் (எலக்கிய கொசு-கமென்ட் 427)

    ReplyDelete
  32. பார்த்தாச்சிங்க. அதையேன் அழிக்கனும்? அங்கயே இருக்கட்டும் தல. :)

    ReplyDelete
  33. இதென்ன விளையாட்டு... நான் இங்க போடுற கமெண்ட்டுக்கு நீங்க அங்க பதில் போடுறீங்க. அதுக்கு பதிலை நான் இங்க எழுதறேன்.

    ReplyDelete
  34. @ஹாலிவுட் பாலா
    ஒரு வேளை நீங்க படிக்கலைய்னா?

    //பார்த்தாச்சிங்க. அதையேன் அழிக்கனும்?//

    அதான் அழிக்கனுமனா அழிச்சுருங்கன்னு சொன்னேன்

    ReplyDelete
  35. படிக்கிறேங்க!! கும்மி பிஸியா இருந்தாதான் படிக்க மறந்திருப்பேன். :)

    ReplyDelete
  36. so the moral of the story is dont even think of deleting anything
    (ஹே..நானும் ஒரு பெரிய வாக்கியத்த இங்கிலிபிச்சுல எழுதிட்டேன்)

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. ஹலோ கொழந்த,

    வழக்கம் போல லேட்டாகவே வந்திருக்கிறேன். உலக சினிமா Experts எல்லாரும் இங்கே இருப்பதைப் பார்த்ததும் சந்தோஷமா இருக்கு.

    //படிப்பதைவிட வீரியம்மிக்கதாக சினிமாவை என்னால் காணமுடியவில்லை//

    நானும் இப்படித்தான் நினைச்சுக்கிட்டு ரொம்ப நாளா சினிமா பக்கம் வராம இருந்தேன். ஆனா James Monaco-வோட How to read a film-கிற புத்தகத்தை யதேட்சையாகப் (கொஞ்சம்) புரட்டியபோது, அவர் சொல்லியிருந்த கருத்து ரொம்ப பிடிச்சுருந்தது (சினிமா என்பது அனைத்துக் கலைகளின் சங்கமம்). அதுக்கப்புறம்தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சமா பார்த்துட்டு வரேன்.

    அதே சமயம் படிப்பது என்பது தனி அனுபவம். அதை சினிமா பார்ப்பதுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பது என் கருத்து.

    Just என்னுடைய கருத்தைச் சொல்லவிரும்பினேன், அவ்வளவுதான்.

    @கீதப்பிரியன், ஹாலிபாலி, கருந்தேள், ககா (நல்லாயிருக்கில்ல?) - இந்தப் பின்னூட்டம் மூலமாக உங்களுக்கும் நன்றி சொல்லிக்கறேன், ஏன்னா உங்க பதிவுகள் எல்லாவற்றையும் படித்துவருகிறேன் (கோவை பாஸ்கரன் அறிமுகப்படுத்தினார்) அதன் மூலம் நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

    இப்ப கொழந்தையும் சேர்ந்துட்டார். கலக்குங்க!!!

    ReplyDelete
  39. @சு.மோகன்
    பாஸ்...என்னப் போயி கீ.பி, ஹா.பா, க.கா, கருந்தேள் லிஸ்ட்ல சேர்த்திட்டீங்க. அவங்கள்லாம் மிக மூத்த பதிவர்கள்(!!!). என்னை விட மிக மிக அதிகமாகவே சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள். இது போக ஜெய், இலுமினாட்டி இந்த மாதிரி பல பேர் இருக்காங்க.
    எல்லாம் ஒரு பகிர்வு தானே.எனக்கு அந்த அளவிற்கு சினிமா பற்றி தெரியாது. இப்ப உங்களே எடுத்துக்கோங்க..James Monacoரீங்க. அந்த பேருல எனக்கு பிஸ்கட் தான் தெரியும். இதெல்லாத்தையும் நீங்களும் எழுதணும்.
    அப்பறம் // Just என்னுடைய கருத்தைச் சொல்லவிரும்பினேன், அவ்வளவுதான்// இந்த மாதிரி formalities வேண்டாம். ரொம்ப சங்கோஜமா இருக்கு.

    ReplyDelete
  40. @சு.மோகன்
    அப்பறம் இந்த ரெண்டு மாசமா தான் தமிழ் ப்ளாக்ஸ் பக்கம் வரேன். அந்த அனுபவத்துல நான் பார்த்த வரையில் ஒரு 100இக்கு 95பேர் ஈகோ இதெல்லாம் பார்க்காம, இவன் யாரு புதுசா வந்துட்டு கமென்ட் போட்டு நொச்சு பண்றான்..அப்படியெல்லாம் நினைக்காம அடுத்தவங்க எழுதுறத ஊக்குவிப்பவர்களாகவே இருக்காங்க.
    இப்படிப்பட்ட சூழ்நிலையில எழுத சந்தோஷமா இருக்கு.
    (நெட்ல யார் எழுதுரதையும் யாராலும் தடுக்க முடியாது. இருந்தாலும் இதெல்லாம் செய்ய ஒரு "இது" இருக்கனும்ல..)

    ReplyDelete
  41. நண்பர் சு.மோகன் அவர்களே தங்கள் மேலான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, ஒரு சாதரண ரசிகனாகவே நான் என் பதிவுகளை எழுதுகிறேன். சக பதிவர்கள் வழியாக நான் அதிகம் அறிந்து கொள்கிறேன் என்பதே உண்மை.

    ReplyDelete
  42. @ கனவுகளின் காதலன்
    ணா.. என்ன இருந்தாலும் LKG new admissionக்கும் +2 distinctionனுக்கும் வேறுபாடு இருக்கில்ல..(உங்கள எல்லாம் ஸ்கூல் பையனாகிட்டேன் பார்த்தீங்களா..)

    ReplyDelete
  43. நண்பர் சு.மோகன் உங்க அறிமுகம் மகிழ்ச்சியளிக்கிறது,தொடர்ந்து உரையாடிவருவோம்,கொழந்த என்னும் பெயரே அவர் எவ்வளவு எளியவர் அடியாருக்கடியாராய் தம்மை நினைப்பவஎ என்று சொல்லுகிறது,சரியா கொழந்த?:)

    ReplyDelete
  44. @கீதப்ப்ரியன்..
    ணா..எனக்கு அடக்கம் கொஞ்சம் அதிகமாவே உண்டுங்கண்ணா....

    ReplyDelete