Thursday, August 12, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ்: வில்லனா? நாயகனா?

ரெண்டு நாளைக்கு முன்னால டிவிடி கடைல மேய்ஞ்சுகிட்டு இருக்குறப்போ இந்தப் படம் கண்ணுல பட்டுச்சு. என்னடா..ரிட்லி ஸ்காட்னனு போட்டுருக்கேன்னு ஒரு ஆர்வத்தில வாங்கி, நேத்துதான் பார்த்தேன். கொலம்பஸ்-அமெரிக்கா-ஸ்பெயின் இந்த மாதிரி வரலாற்றில் ஆர்வமிருப்பவங்களுக்கு நல்ல தீனி. ஏற்கனவே இந்த விசயங்கள் எல்லாம் தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லது. இல்லேனா படம் கொஞ்சம் போர் மாதிரி தோணும். என்னயிருந்தாலும் ரிட்லி ஸ்காட்டின் trademark stunnig visualsக்காக கண்டிப்பா பார்க்கலாம். சரி.. இனி கதைக்கு போவோம்.

(இந்தப்படம் கிறிஸ்டோபர் கொலம்பஸின் புகழ் பெற்ற கடல் பயணம் 1492ல் ஆரம்பித்து 500 ஆண்டுகள் நிறைவுற்றதை குறிக்கும் விதமாக 1992ல் வெளியிடப்பட்டுள்ளது).

படத்தின் பெயர் போடும் போதே பின்னணியில் பூர்வகுடிகளை கொடுமைப்படுத்திய காட்சிகளை ஓவியமாக காண்பிக்கின்றனர். அது முடிந்து கொலம்பஸ் தன் மகனுக்கு கடலைப் பற்றி சொல்லிக்கொடுப்பதில் படம் ஆரம்பிக்கிறது கொலம்பஸ் இத்தாலி நாட்டில் பிறந்திருந்தாலும் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தவராவார். அவர் 1491ல் அட்லாண்டிக் கடல் வழியாக நேர் மேற்கில் சென்று, ஆசியாவுக்கு ஒரு புதிய கடற்பாதையை கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாக நம்புவதோடு மட்டுமல்லாமல், அதை பல அறிஞர்களுக்கும் நீருபிக்க முயல்கிறார். ஆனால் யாரும் அவர் கூற்றை நம்பத் தயாரில்லை. ஒரு வழியாக நயமாக பேசி சமாளித்து அந்தக் கடல் வழியைக் கண்டுபிடிக்க அரசி முதலாம் இசபெல்லாவின் உதவியைப் பெறுவதில் (ஏராளமான புதையல்களை அள்ளி வருவதாகக் கூறி) வெற்றி காண்கிறார்.

ஒரு படையைக் கூட்டிக் கொண்டு1492 ஆகஸ்ட் 3 அன்று ஸ்பெயினிலிருந்து பயணத்தைத் தொடங்குகிறார். கொலம்பஸ் கண்டுபிடிக்கும் எந்த நிலப்பகுதியாய் இருந்தாலும் அதற்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக இசபெல்லா அவருக்கு வாக்குறுதியளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 வாரங்கள் பயணம் மேற்கொண்டும் நினைத்தது போல் ஒன்றும் தென்படவில்லை. கப்பலைச் சார்ந்தவர்கள் பொறுமையிழந்து, கூச்சலிட ஆரம்பிக்கின்றனர். கடைசியாக கரை தென்படுகிறது. ஆரவாரத்துடன் அதில் ஒதுங்குகின்றனர்(கானரித் தீவுகள்). கொலம்பஸ் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டு அதற்கு “சான் சல்வடோர்” என்று பெயரிடுகிறார். இது வரை வேற்று மனிதர்கள் வாசனையே அறியாத இடமான அக்காடுகளும் ஆறுகளும் பறவைகளின் ஓசையும் சொர்க்கம் போலவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றது (அதனால்தான் படத்தலைப்பு Conquest of Paradise). அங்கு இருக்கும் பூர்வகுடிகளுடன் சகஜமாக பழகுகிறார்கள்.


அவர்களில் சிலர் தங்கத்தில் செய்த ஆபரணங்களை அணிந்திருப்பதைக் கண்டு தங்கத்தை தேடி எடுக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாகினாலும் சிறிதளவே தங்கம் கிடைக்கிறது(அதுவும் அந்த மக்கள் விரும்பி கொடுத்தது). அங்கிருந்து கிளம்பி ஹைதி தீவுகளை அடைகின்றனர். அங்கிருக்கும் பூர்வகுடிகளுடன் (டைனோ இனத்தவர்) பேசி ஒரு கோட்டை கட்டுவது என்று முடிவாகின்றது.தன்னுடன் வந்திருந்தவர்களில் ஒரு 40 பேரை மட்டும் கோட்டை கட்டுவதற்காக விட்டுவிட்டு மறுபடியும் ஸ்பெயினுக்கு சிறிதளவே தங்கத்துடன் திரும்புகிறார் கொலம்பஸ். ஸ்பெயினில் அவருக்கு உற்சாகமான வரவேற்பளிக்கின்றனர். எல்லாம் முடிந்து தங்கத்தைப் பற்றி பேச்சு வரும் பொழுது இவ்வளவுதான் கிடைத்ததா என்று அணைவரும் கேட்க, மறுபடியும் போனால் இதை விட அதிகமாகவும், நமது கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் இன்னும் தூர தேசங்களுக்கு சென்று பரப்பலாம் என்று கொலம்பஸ் கூறுகிறார்.இம்முறை அவரோடு ஸ்பெயின் ராஜ வம்சத்தை சேர்ந்த பலரும் வருகின்றனர். அதில் மோசிக்கா என்ற முசுடும் உண்டு. அவர்கள் மேற்கிந்திய தீவை அடைந்தவுடன் அங்கே ஏற்கனவே விட்டு வந்த 40 பேரும் இறந்திருப்பதைக் கண்டு கொதிப்படைகின்றனர். அதிலும் மோசிக்கா, இதற்கு அந்த பூர்வகுடிகள் தான் காரணம், அனைவரையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று கூறுகிறான்.
கொலம்பஸ் அனைவரையும் அமைதிப்படுத்தி என்ன நடந்தது என்று விசாரிக்க, கடலில் இருந்து வந்த வீரர்கள் உங்கள் ஆட்களைக் கொன்று விட்டனர் என்று பூர்வகுடிகளின் தலைவன் தெரிவிக்கிறார். மோசிக்கா இதை நம்பாமல் அவர்களை கொல்வதிலேயே குறியாய் இருக்கிறான். கொலம்பஸ் அவர்களிடம் பேசி புது நகரத்தை உருவாக்குவதில் அவர்களது உதவியையும் பெறுவதில் வெற்றிபெறுகிறார். கிட்டத்தட்ட ஒரு அரசாங்கத்தையே நிர்மானிக்கின்றனர். பின் ஏற்படும் விபத்தில் நகர கட்டுமானப்பணிகள் தேக்கமடைய-பூர்வகுடிகளுக்கும் மோசிக்காவிற்கும் சண்டை வர-இன்னொரு பூர்வகுடி கும்பல் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடக்க-மோசிக்கா கொலம்பஸின் இடத்தைக் கைப்பற்ற நினைக்க-அதில் அவன் இறக்க என்று பெரும் குழப்பும் ஏற்படுகின்றது. இது ஸ்பெயினிற்கு தெரிந்து அவரை பதவியிலிருந்து தூக்கிவிட்டு,திரும்பி வர உத்தரவிடுகின்றனர். வந்தவுடன் கைதும் செய்கின்றனர்.அப்போது அவருக்கு அமெரிகோ வெஸ்புகி தென் அமெரிக்க நாடுகளுக்கு உரிய பாதையை கண்டுபிடித்துவிட்டார் என்ற செய்தியும் தெரிகிறது. பின் சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறார். இந்நிலையில் உலக வரைபடத்தை தயாரிக்கும் பொழுது அவர் கண்டறிந்த கண்டத்திற்கு “அமெரிக்கா” என்று பெயர் சூட்டப்படுவதைக் கண்டு விரக்தியடைகிறார். பின் மகனுடன் சேர்ந்து நாலாவது முறையாக பயணத்தைத் தொடங்க ஆயத்தமாகிறார். பையன் பெர்னாண்டோ என்பவர் தன் தந்தையை பற்றி எழுதிய குறிப்புகளைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியோடு படம் நிறைவடைகிறது.

                           இது ரிட்லி ஸ்காட்டின் படம் என்பதால் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது. குறிப்பாக பூர்வகுடிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும், கப்பல் காட்சிகளும் ரொம்பவே அருமையாக இருந்தது. அப்பறம்....இசை-வாங்கலிஸ் (Vangelis, இந்தப் பேர சரியா எப்படி உச்சரிக்கிறது?..). நம்ம ரஹ்மான் தனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர்னு இவரைப்பத்தி சொன்னத படிச்சிருக்கேன்.சும்மா சொல்லக்கூடாது.பின்னியிருக்கிறார். கேட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். அப்புறம் கொலம்பஸா Gerard Depardieu (தமிழ்ல எனக்கு வரல.விட்டுருங்க). நான் இவர அஸ்டரிக்ஸ் படத்துல பார்த்த ஞாபகம். பிரெஞ்சு நடிகர். செமயா நடிச்சிருக்கார். கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதுன்னு சொல்வாங்கள்ல, அதற்கு சரியா பொருந்துகிறார்.


என்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம் எல்லா படத்தின் பின்னணியையும் ஆராய்றது. சப்ஜெக்டே இல்லாத படத்தையே நொண்டிக்கிட்டு இருப்பேன். இதுல கொலம்பஸ் மாதிரி சப்ஜெக்ட் கிடைச்சா விடுவேனா. ஏற்கனவே கொலம்பஸ் பத்தி எக்குத்தப்பா கேள்விப்பட்டிருக்கேன்..படிச்சிருக்கேன்.அதை இங்க பகிர்ந்துக்க ஆசைப்படுகிறேன். விருப்பம் இருக்குறவுங்க கண்டின்யூ..இல்ல.டாட்டா..சீ யு..பைபை

கலைஞர் ஸ்டைல்ல நானே கேள்வி நானே பதில்..

கொலம்பஸ் எதைக் கண்டுபிடித்தார்? வெஸ்புகி எதைக் கண்டுபிடித்தார்?
ரெண்டு பேருமே அமெரிக்க கண்டங்களை கண்டுபிடித்தவர்கள் தான். யாரு முதல்ல?

கொலம்பஸ்:
இவரு 1492ல முதல்ல கரிபியன் தீவுகள கண்டுபிடிச்சுட்டு அது ஆசியால ஒரு பகுதின்னு நினச்சுக்கிட்டார். இவரு “Mainland” அப்படின்னு சொல்லப்படுற நிலப்பகுதிய பார்க்கவேயில்ல. தென் அமெரிகாவிற்கோ வட அமெரிகாவிற்கோ உள்ளே போகவேயில்ல. இந்த படத்தப் பார்த்தா புரியும்.
இதுல அவரு தென்-வட அமெரிக்காவிற்கு போகாம, கரீபியன் தீவுகளை மட்டும் தொட்டுட்டு வர்றது தெரியும்.

வெஸ்புகி:
இவரு 1505ஆம் ஆண்டு தான் அமெரிக்க கண்டங்களைத் தேடி 4 முறை போனதுக்கு ஆதாரமா ஒரு கடிதத்தை வெளியிடுகிறார். அதன்படி 1497ல தென் அமெரிக்காவிற்கு முதல்ல போனவர் என்று இவரை ஒரு ஜெர்மன வரைபட தயாரிப்பாளர் அறிவிக்கிறார். அதோடு இல்லாம அக்காலத்தில மேதைகளின் மொழியாக கருதப்பட்ட லத்தின் மொழில “அமெரிகோ” என்பதற்கு பெண் பெயரான “அமெரிக்கா (ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா-இதுவும் பெண் பெயர்கள் மாதிரி)” என்பதை தான் தயாரித்த வரைபடத்தில் இருந்த கண்டங்களுக்கு சூட்டுகிறார்.
ஆக முதல்ல அமெரிக்க கண்டங்களில் கொலம்பஸ் கால் பதித்திருந்தாலும்(1492), கொஞ்சம் அதிகப்படியாக அந்தப் பகுதிகளை, குறிப்பாக தென் அமெரிக்காவை(1497) சுற்றியவர்னு வெஸ்புகியைச் சொல்லலாம். இதுல ஏன் வெஸ்புகி முதல்ல வந்துச்சுன்னு இந்தப்படத்தில் சொல்லியிருக்காங்க.

இவுங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி யாருமே அந்தப்பகுதிகளுக்கு போனதில்லையா?

  • 10,000 BC லயே சைபீரியாவிலிருந்து ஒரு மக்கள் குழு அலாஸ்கா நோக்கி புலம்பெயரும் போது அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் குடியேறி கொஞ்சம் கொஞ்சமாக தென்-வட அமெரிக்காவில் வாழத்தொடங்கியுள்ளனர். அவர்கள் தான் அமெரிக்க கண்டத்தின் பூர்வகுடியினர் என்று அழைக்கப்படுகின்றனர்(மாயன், இன்கா மக்கள் இவர்கள்தான் என்றும் கூறுகின்றனர்). 
  • அதைப் போன்றே இஸ்ரேலைச் சேர்ந்த பழங்குடியினரும், ஆப்பிக்காவைச் சேர்ந்த கார்திஜியன்சும் சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
  • 10ஆம் நூற்றண்டிலேயே (982AD) எரிக் ரெட் என்ற நோர்வேஜியன் வைகிங்க்ஸ் அரசர் தன் குழுவினருடன் தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் எனவும், அதைத்தொடர்ந்து லய்ப் எரிக்சன் என்ற மாலுமியும் 12ஆம் நூற்றண்டில் சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

கொலம்பஸ் ஏன் புது கடல் வழியை கண்டறிய முனைய வேண்டும்?
Fall of Constantinople” இதைப்பற்றி 9,10 வரலாறில் படித்தீருப்பீர்கள். (நா படிக்க இன்னம் ரெண்டு வருஷம் இருக்கு). Constantinople-ரோமானியர்களின் தலைநகரம். இதை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றுகின்றனர் (ஒட்டோமான் துருக்கியர்கள் என்றவுடன் ஓரான் பாமுக்கின் “My name is Red” ஞாபகத்திற்கு வருகிறதா). அதுவரை சீனா-இந்தியாவிற்கு சென்று வர இருந்த தரைவழிப்பாதை Constantinople வழியாகவே சென்றது. துருக்கியர்கள் அதை பிடித்தவுடன்(1453) அந்தப் பாதை அடைபட்டதால், ஐரோப்பிய நாடுகள் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. பல பேரும் இந்தியாவைத் தேடி புறப்பட்டாலும் கடைசியாக 1498ல் வாஸ்கோ-டே-காமா அதைச் சாதித்தார்.

கொலம்பஸின் பயணத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன?
கொலம்பஸ் பயணம் ஆரம்பித்த (15ஆம் நூற்றாண்டின் கடைசி கட்டம்) காலத்தில் ஐரோப்பாவில் ஆட்சியில் இருந்து அரபு முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தனர் (இந்தப்படத்தில் கூட Granada என்ற முஸ்லிம் நினைவகத்தை இடிக்கும் காட்சி வரும்). கிறிஸ்தவ தேவாலயங்கள் (குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்) முஸ்லிம்கள் இடையேயான சண்டை உச்சதிலிருந்தது. தேவாலயங்கள் சக்திமிக்கதாக உருவேடுத்திருந்தன(இந்தப் படத்தில்கூட சூனியக்காரர்களை விரட்டும் “Burning of Heretics” உயிரோடு கொளுத்தும் சடங்கைக் காணலாம்) “Crusade war(1095-1291)” சிலுவைப்போர் ஞாபமிருக்கிறதல்லவா..அதன் நீட்சியாக இதைக் காணலாம். எனவே புதிய நாடுகள்-செல்வத்திருக்கும், மதத்தை பரப்புவதற்கும், வேலைக்கு தேவையான அடிமைகளுக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும்-தேவைப்பட்டன. இந்த சண்டைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் ஸ்பெயினும், போர்சுகல்லும் முதன்மையாக ஈடுபட்டன.


எனவே கொலம்பஸ் போன்றவர்களது பயணம் பூர்வகுடிகளின் இனஒழிப்பிற்க்கு பெருமளவில் வித்திட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. தங்கத்தைத் தேடிச்சென்ற கொலம்பஸ் மாறாக அடிமைகளையே கொண்டு வந்தார். ஹிஸ்பனோ தீவிலும், ஹைதி தீவிலும் பெருமளவு இனப்படுகொலை நடந்ததாக சொல்கின்றனர். கொலம்பஸ் எந்த அளவு வரலாற்று நாயகனாக போற்றப்படுகிறாரோ(இப்படத்தைப் போல) அதே அளவு, சொல்லப்போனால் அதைவிட அதிகமாக தற்பொழுது இனப்படுகொலைக்கு வித்திட்டவராகவும் அறியப்படுகிறார். 

நோம் சாம்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்

QUESTION: 1992 is the 500th anniversary of Columbus's voyage to the Americas. Official celebrations speak of the "fifth centenary of the discovery of America" and of the "meeting of two cultures." Are these appropriate ways to refer to this event?

CHOMSKY: There's no doubt that there was a meeting of two worlds. But the phrase "discovery of America" is obviously inaccurate. What they discovered was an America that had been discovered thousands of years before by its inhabitants. Thus, what took place was the invasion of America -- an invasion by a very alien culture.

மேலும் படிக்க...


வெனிசுலாவின் பிரதமர் ஹுகோ சாவேஸ் கொலம்பஸ் பற்றி கூறியவை

இந்த காலனியாதிக்கத்தை தான் ஆய்வாளர்கள் “European colonization of the Americas” என்கின்றனர். இதற்கு அடுத்து ஏற்பட்டதே ஆசியா&ஆப்ரிக்கா காலனியாதிக்கம். இதை “New Imperialism” என்று அழைக்கின்றனர். ஆனால் ஒன்று..அந்தக்காலத்தில் போர் என்றால் நேரடியாகவாவது படையெடுத்தனர். போகப் போக அது ரொம்ப செலவுபிடித்தது, சிரமமானது என்பதால் வேறு வகையில் தாக்குதல் நடத்துகின்றனர். கலாச்சார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக இன்னும் பல மாதிரி. பிரிட்டிஷ் 1947ல் வெளியேறினாலும், only they are physically absent.அப்போ வெள்ளக்காரன்ட முதுகு வலைஞ்சிருந்தவர்கள், இப்ப நம்ம ஆட்கள்கிட்டயே வலைஞ்சிருக்காங்க. என்ன..கலர் தான் வித்தியாசம். அவன் வெள்ளை. நம்ம கருப்பு. என்னமோ போங்க..எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடிக்கிறேன்.

பி.கு:  இது தொடர்பாக விஷயங்கள் தெரிந்த நண்பர்கள் அதைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. அதே போல் ரிட்லி ஸ்காட்டின் "Kingdom of Heaven" பார்க்காதவர்கள், சிலுவைப்போரைப் பற்றி தெரிந்து கொள்ள அதைப் பார்க்கலாம்

Facebookers..

30 comments :

  1. மிக மிக அட்டகாசமான அலசல் இது. படிப்பதற்கு மிகச் சுவாரஸ்யமான பதிவு..

    ரிட்லி ஸ்காட், ஆங்கிலத்தின் ஒரு வெர்ஸடைல் இயக்குநர். பலவகையான தீம்களையும் எடுத்துக்கொண்டு படமாக்குவது அவருக்குப் பிடித்த வேலை ;-)

    இந்தப் படம் இன்னமும் பார்க்கவில்லை. சொல்லிட்டீங்கல்ல.. கட்டாயம் பார்க்கப்படும் தலீவா ;-)

    ReplyDelete
  2. தல... வெய்ட் ப்ளீஸ்..

    ReplyDelete
  3. அதேபோல், கிங்டம் ஆஃப் ஹெவன், ஸ்காட்டின் இயக்கத்தில் எனக்கு மிகமிகப் பிடித்த படங்களில் ஒன்று. அது எனக்குப் பிடித்த காரணம், Age of Empires கேமில் வரும் அரசன் ஸலாதீன், இப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக வருவதே !!

    அந்த கேமில் இருக்கும் பல சினாரியோக்களில் இந்த ஸலாதீன் வரும் கேமும் ஒன்று ;-)

    ReplyDelete
  4. பை த பை, மீ த ஃபர்ஸ்ட்டு !! ;-)

    ReplyDelete
  5. பாலா... வெய்ட் ப்ளீஸ் சொன்னது கொழந்தைக்கா எனக்கா ;-)

    ReplyDelete
  6. கொழந்த இன்னா இது கொழந்த தனமே இல்லாத பதிவு.. அட்டகாசமான அலசல் :)

    ReplyDelete
  7. என்ன..
    தேளே பார்க்காத படமா?
    நாளைக்கு எல்லார்க்கும் ட்ரீட்.

    @இ.கண்ணன்
    நா கொஞ்சம் பிறவி மேதைக் கொழுந்த
    வந்தமைக்கு ரொம்ப நன்றி

    @பாலா
    உங்க சைட்ல ஏற்கனவே உங்களுக்கு நன்றி சொல்லிட்டேன்

    ReplyDelete
  8. கொழந்த... கலக்குறீங்க... புதுசு புதுசா அறிமுகப்படுத்தறீங்க... நல்லது...

    ReplyDelete
  9. @ ஜெய்
    யாரும் தூங்குறதப் பத்தி ரோசன பண்றதேயில்லையா. நன்றி பாஸ். சீக்கிரம் நீங்க வேற பதிவு போடுங்க

    ReplyDelete
  10. மம்மி திட்டிங். மீ கோயிங். சாரி

    ReplyDelete
  11. அருமையான அலசல்
    பட விமர்சனத்தோடு நில்லாது மேலும் தேடிச் சுவைப்ப்படப் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  12. @தர்ஷன்
    என்னித படிக்கறதுக்கு நான்தன் நன்றி சொல்லணும்.

    ReplyDelete
  13. // (நா படிக்க இன்னம் ரெண்டு வருஷம் இருக்கு).//

    அப்போ என்ன விட ஆறு வருஷம் சீனியரா நீங்க?

    //இவுங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி யாருமே அந்தப்பகுதிகளுக்கு போனதில்லையா?//

    ஏங்க, நம்ம ஹாலிவுட் பாலா அங்க போகல? அவரு அங்கிட்டு போனதால்தான் அவரு பேருல இருக்குற ஹாலிவுட், அமேரிக்கா என்பதை கொண்டு அமெரிக்க என்று பெயரிட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர் ஒருத்தர் சொல்றாரு.

    ReplyDelete
  14. @King Viswa
    ரொம்ப நன்றி அண்ணே
    அங்க உங்காளு 2400 கமென்ட் போட்டுட்டுயிருக்கார். இதலாத்தையும்
    தட்டிக் கேட்க மாட்டிங்களா

    ReplyDelete
  15. கேக்கலாம்தான். ஆனா பயம்மா இருக்கு கொழந்த சார். விட்ட நம்ம பிளாக்ல கூட இதேபோல என்று பண்ணிடுவாரோ என்றுதான்.

    மத்தபடி இன்னிக்கு நானும் அங்கிட்டு கும்மியில ஆஜராவேன்.

    ReplyDelete
  16. @King Viswa
    அங்கிள்.. கவலைப்படாதிங்க. அப்படி ஏதாச்சு ஆச்சுனா பார்துக்கலாம்

    ReplyDelete
  17. @வால் பையன்
    வால்பையன் இந்த சின்னப்பையனை தொடர்வதற்கு நன்றி

    ReplyDelete
  18. @ RAJ
    யார் சார் நீங்க..
    உங்க profileயாவது தைரியமா வையுங்க. அனானியா கமென்ட் போட முடியாதுன்னு சும்மா ஒரு profileல உண்டாக்கிட்டு, இப்படி அபத்தமா காமெடி பண்ணாதீங்க. தயவுசெய்து இந்த மாதிரி கேனத்தனமானா (இந்த வார்த்தைய உபயோகிக்க வருத்தப்படுகிறேன்)கம்மெண்டோட இந்த ஏரியா பக்கமே வராதிங்க. Dont frustrate me to use filthy words.

    ReplyDelete
  19. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
    Link:www.secondpen.com/tamil/what is jaiku?

    ReplyDelete
  20. நண்பரே,

    கொலம்பஸ் பற்றிய அலசல் அருமை. தொடர்ந்து அதிரடிகளை தாருங்கள் :))

    ReplyDelete
  21. நல்ல படம் நண்பா,பார்த்திருக்கிறேன்.
    அட்வென்சர் படமா அறிமுகம் செய்கிறீங்க,நல்ல பதிவு.முந்தைய பதிவில் என்ன சொன்னேன்.நினைவிருக்கா?நல்ல பதிவுகள் நிச்சயம் ரீச் ஆகும் நண்பா.கலக்கல்

    ReplyDelete
  22. http://www.tamilmanam.net/thiraimanam
    இதுல உள்ள விபரங்களை பின்பற்றி பட்டையை இனையுங்க,நான் பட்டை வைக்கலை,ஆனாலும் அது தொடர்ந்து திரட்டும்.நீங்க ஒரு முறை இணையுங்க.பட்டை மூலமா ஒட்டுக்கள் போட்டு சிலர் ஊக்குவிப்பார்கள்.நான் ஒரு ஓட்டு கண்டிப்பா போடுவேன்.
    ===
    எப்போதுமே புது பதிவு,பழைய பதிவுன்னு ஃபிக்ஸ் ஆகாதீங்க,எல்லாமே உங்க சொத்து தான்.

    ReplyDelete
  23. @கனவுகளின் காதலன்
    நண்பரே..ஊக்குவிப்பதற்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  24. ணா.. நீங்க சொன்ன மாதிரி தமிழ்மனம் பட்டைய முயற்சி செய்து பார்த்தேன். அது ப்ளாக் தோற்றத்தை கெடுக்குற விதத்துல இருக்குற மாதிரி தோணுது.(இந்த ப்ளாகுல தோற்றமான்னு தேடுரீங்களா). அதுனால இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி. உண்மையிலேயே இந்த ஓட்டு, ஹிட்ஸ் இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. மண்டைக்குள்ள இருக்குறத கொட்ட ஒரு இடம் வேணும். அவ்வளவே.

    சொல்லப்போனால் நான் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக Followers, comments இதெல்லாம் கிடைச்சிருக்கு
    (எதிர்பார்கலைன்னு சொன்னா அது பொய்). முதல்ல எழுதியிருந்த ஒரு பதிவுல கருந்தேள், க.காதலன் இவுங்க லிங்க உபயோகப்படுத்யிதிருந்தேன். கருந்தேள் அவரு சைட்ல copyright protected-அது இதுன்னு போட்டிருந்தாரா, அதுல மெர்சலாயி ஓகோ யாருடைய லிங்க பயன்படுத்தினாலும் சொல்லிட்டு தான் செய்யனும் போலன்னு(இந்தியக்கு உள்ளகிறதுனால ஈஸியா பிரச்சினை வரும்னு நெனச்சேன், உன்ன்மயிலேயே)அவுங்களுக்கு கமென்ட் போட்டேன். கருந்தேள் உடனே தன் ப்ளாக் லிஸ்ட்ல என் ப்ளாகையும் சேர்த்தார். அப்புறம் காதலன்,விஸ்வா,ஜெய்,நீங்க இன்னும் பல பேர் வந்து கமென்ட் போட்டீங்க. இது சத்தியமா நான் எதிர்பார்க்காதது. அப்ப நான் இன்ட்லில கூட சேரல. கருந்தேள் ப்ளாக்லிஸ்ட பார்த்து நீங்கெல்லாம் வந்திங்க. நீங்கெல்லாம் உங்க ப்ளாக்லிஸ்ட்ல என்னித சேர்த்ததுக்கப்பறம் பல பேர் வராங்க.இந்த விஷயமெல்லாம் இப்பதான் எனக்கு கொஞ்ச கொஞ்சமா புரியுது. இப்ப நான் புதுசா ஒரு ப்ளாக்கில் கமென்ட் போட்டா, எங்க அவுங்க தன் ப்ளாகிற்கு ஆள செக்குறானோன்னு நெனச்சிருவாங்களே..அப்படீங்கறதுக்காகவே பல ப்ளாக படிச்சிட்டு கமென்டே போடாம வந்திர்றேன்.

    இப்ப நான் பதிவெழுத வந்து ஒரு 3 வருசாமச்சுன்னு வெச்சுக்குவோம். புதுசா ஒருத்தர் எழுத வரார். நம்மளுக்கு பிடிச்ச விஷயத்தைப்பற்றி எழுதுறார். இருந்தாலும், கருந்தேள் ப்ளாக்லிஸ்ட்ல சேர்த்தது மாதிரியோ, நீங்கெல்லாம் வந்து கமென்ட் போட்டது மாதிரியோ நா செஞ்சிருப்பேனா என்பது சந்தேகமே (That shows you people's passion towards cinema).
    சரி கொஞ்ச நாள் எழுதட்டும்-அப்பறம் பார்போமம்னுதான் நினச்சிருப்பேன். அதுக்குன்னு குப்ப மாதிரி புதுசா எழுதுறவங்களா இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு இதெல்லாம் செய்வீங்கன்னு சொல்ல வரல. செரிய சொல்லத் தெரியல. உங்களுக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி "நல்ல பதிவுகள் நிச்சயம் ரீச் ஆகும்". எனக்கு தெரிஞ்சது ஒன்னே ஒன்னுதான். எந்த விசயத்த செஞ்சாலும் நேர்மையா, முழுமூச்சா செய்யனும். அவ்வளவே. நல்ல விசயத்த பார்த்தா அத உடனே அடுத்தவர்களிடம் பகிர்ந்துக்கனும்ன்னு நினைக்குற பல பேர் இந்த பதிவுலகத்துல இருக்கிறத நான் பார்க்கிறேன். அப்படி உங்களைப் போன்ற ஆட்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் இந்த மாதிரி செய்யுறத பார்க்குறப்போ-இத நான் அடுத்தவர்களுக்கு பதிவுலகத்திலோ, வெளியிலோ செய்யணும்னு தோணுது. ஓவரா sentimentalலா பேணாத்துரதா நினைக்காதிங்க. எனக்கு கோர்வையாக வராது. தோணுறத அப்படியே சொல்லிருவேன். ப்ளாக்குன்னு எழுத ஆரம்பிச்ச இந்த ரெண்டு வாரத்தில நான் கத்துகிட்ட விஷயங்கள் இவை. (கொஞ்சம் ஓவரா போயிருந்தா பொறுத்தருள்க)

    ReplyDelete
  25. ஹலோ,
    எதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம்.ஆனாலும் சொன்னவிதம் அருமை குழந்தை.கலக்குங்க

    ReplyDelete
  26. i had seen this film on star movies some six years back,after that it isnot viewed in any channel as for as i know.

    ReplyDelete
  27. @ saravanan
    பாஸ்...எனக்கு அது தெரியாது. நான் டிவிடி தான் பார்த்தேன். வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  28. வெறும் விமர்சனம் மட்டுமில்லாமல் நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி!

    ReplyDelete
  29. @எஸ்.கே
    ரொம்ப நன்றி பாஸ்..

    ReplyDelete
  30. @எஸ்.கே
    ரொம்ப நன்றி பாஸ்..

    ReplyDelete