Wednesday, August 4, 2010

உலக திரைப்படங்களை எங்கு வாங்க?





போனா பதிவுல நா கேட்காமையே இன்ட்லில முத்திரை குத்திய அனைத்து குழந்தை மனம் படைத்தவர்களுக்கும் நன்றி. அப்புறம், ரொம்ப முக்கியமான விஷயம். பல பேர் ஒரே சமயத்துல என் ப்ளாக்அ படிக்கணும் முட்டி மோதுறதுனாலே ப்ளாக்கர் சைட்யே கிராஷ் ஆயிருதுன்னு சொல்றாங்க ஜாக்சன்,"அவரு", அப்பறம் எனக்குதான் இப்படி நடக்குறதாவும் சொல்றாங்க. (ஏன் அவரு காமெடி பண்ணா மட்டும் ஒத்துக்குறாங்க? நா சொல்லக்கூடாதா. ஆனா நா சீரியஸ்ஸாதான் சொல்றேன் ). உங்க ஆர்வம் புரியுது. இருந்தாலும் நா எங்க போகப்போறேன், இல்ல ப்ளாக்தான் எங்க போகப்போகுது.ரைட்.மேட்டருக்கு வருவோம். ஏற்கனவே உலக சினிமா பார்க்குறது-வாங்கறது இது குறித்து தெரிஞ்சவங்க கடைசி பத்திக்குப் போங்க. இதுக்கு மேல படிச்சு ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமா தெரிஞ்சா (ஏதாவது இல்ல, ஏறக்குறைய எல்லாமே) அதுக்கு நான் ஜவாப்தாரி இல்ல.

நா கூகிள் transliterationஐ பயன்படுத்தி தான் இந்த பத்து நாள்ல தமிழ்ல தட்டச்சு செய்ய கத்துக்கிட்டேன். இந்த ஒரு மென்பொருள் மட்டும்மில்லாமல் பல தமிழ் மென்பொருட்கள், எழுத்துருட்கள், வார்த்தைகள், வலைபூக்கள் இப்புடின்னு பல தமிழ் சார்ந்த விசயங்களை யாரோ முகம் தெரியாத நபர்கள்தான்(பெரும்பாலும் இலவசமாக) உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.அத சரியா வெளிப்படுத்தவும் தெரியல.எனக்குத் தெரிந்தவற்றை பிறருடன் பகிர்வதின் மூலமே அதைச் செய்யலாம்னு நான் நம்புகிறேன். நான் வலைப்பூ எழுத ஆரம்பிச்ச காரணங்கள்ள இது மிக்க முக்கியமான ஒன்னு.
.....................................
இந்த உலக திரைப்படம், உலக திரைப்படம்னு சொல்வாங்களே (தனிப்பட்ட முறைல இந்தப்பதம் எனக்கு பிடிக்காது. என்னளவில் திரைப்படம் தான்) அத எல்லாம் எப்படி வாங்குறது? தெரிஞ்சுக்குறது அப்பிடின்னு நூற்றுக்கணக்கானோர் என்னிடம்...... கேப்பாங்கனு நெனச்சேன். யாரும் அப்படிலாம் கேட்கலே. இருந்தாலும் தாய் தடுத்தாலும் விடேன்னு சொல்லியே தீருவேன். என் ப்ளாகையும் ஒரு 50 பேராவது படிக்கிறாங்கனு கவுன்ட்டர் ஹிட்டை பார்த்தா தெரியுது. அதுல கண்டிப்பா என்னைவிட மிக அதிகமாக சினிமாவைப் பத்தி தெரிஞ்சவங்க 48 பேர் இருப்பாங்க. அதேபோல இந்த மாதிரி படங்களைப் பார்க்கணும்னு ஆர்வம் இருந்தாலும் எங்க கிடைக்கும்னு தெரியாதவங்க கண்டிப்பா 2 பேர் இருப்பாங்க(நா அப்படித்தான் இருந்தேன்(கேன்) ஹி. ஹி..). அவுங்களுக்கு என்னால் ஆனா உதவி(எனக்கும் முழுசா தெரியாதுன்கறது வேற விஷயம்). இதுக்குனு குறிப்பா வரைமுறைகள்னு ஒண்ணுமில்ல. ஆர்வம் இருந்தா அதுவே 50% முடிஞ்ச மாதிரி. நா எனக்கு தெரிஞ்சா 4 வழிகள பகிர்ந்துக்கிறேன்.

1. படிக்கிற புத்தகங்களில், அதில் வரும் திரைப்படங்கள்:
இப்பலாம் வெகுஜன பத்திரிக்கைகளில் இருந்து தீவிர இலக்கிய பத்திரிக்கைகள் வரை உலக திரைப்படம் குறித்த செய்திகள், விமர்சனங்கள் அதிகளவில் வருகின்றன என்பதை எல்லோரும் கவனித்திருப்போம்(கவனிக்கறது மட்டும்மில்லாமல் அதை நல்லா என்ன மாதிரி ஞாபகம் வெச்சுக்கணும். இதைத்தான் கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்னு நம்ப இவரு......ஆங்....அவரு...சொன்னார்). அப்படி நான் பல வருடங்களாய் படித்த வரையில் உலக திரைப்படங்கள் குறித்த அறிமுகங்கள்,விமர்சனங்கள் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட்டு வரும் பத்திரிகைகள், எழுத்தாளர்கள்:

பத்திரிக்கை:
உயிர்மை
காலச்சுவடு
உயிரெழுத்து
வார்த்தை
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
தீராநதி

இணையஇதழ்:
உயிரோசை
காலச்சுவடு
கீற்று
திண்ணை
நிலாச்சாரல்
வல்லினம்
கூடு-குறும்படம்

எழுத்தாளர்கள்:
எஸ்.ராமகிருஷ்ணன்
சாரு நிவேதிதா
அஜயன் பாலா

இந்த புத்தகங்களில் ஏதாவது ஒன்றையாவது வாங்க முடிந்தால் நலம்.(ரெண்டு வருசங்களுக்கு முன்னாடி எல்லா நூலகங்களிலும் வந்துகிட்டிருந்தது. ஏதோ அரசியல் காரணமாக நிறுத்திட்டாங்க).இது போக இலக்கிய பத்திரிகைகளில் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர்

அம்ஷன் குமார்
யமுனா ராஜேந்திரன்
அ. ராமசாமி

இவற்றுக்கெல்லாம் மேலாக இருக்கவே இருக்கு வலைப்பூ. அதில் (தொடர்ந்து, அதிகளவில்) திரைப்படங்கள் குறித்து எழுதுவோர்.

கருந்தேள் கண்ணாயிரம்
கனவுகளின் காதலன்
பிற மொழிப்படங்கள்... தமிழில்...
கீ த ப் ப் ரி ய ன்
Butterfly Surya
கனவில் உறையும் உலகம்
வார்த்தைகள்
ILLUMINATI
அக்கரைச்சீமை
Babyஆனந்தன்
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
நிலா முகிலன்
பாரதிக்குமார் (நண்பர் கீ த ப் ப் ரி ய ன் அறிமுகப்படுத்தினார் )

இவர்களைத் தவிர நெறைய பதிவர்கள் அவ்வப்போது உலக சினிமாக்கள் குறித்து சிறப்பாக எழுதுகிறார்கள்.நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிங்கனா இன்னும் வசதி. மேலே சொன்ன வலைப்பூக்களுக்கு போனிங்கனா, அவர்கள் பின்பற்றும் ப்ளாக்-விரும்பிய விமர்சன தளங்கள் ஆகியவற்றை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

பி.கு: நான் கடந்த ஆறு மாத காலத்தில் கடந்து வந்த வலைப்பூக்களை மட்டும்மே குறிப்பிட்டுள்ளேன். யாரவது மேற்கொண்டு வேற எழுத்தாளர்களையோ, வலைப்பூக்களையோ சொன்னா எல்லோரும் தெரிஞ்சுக்கலாம்.

2. சரி..படிச்சாச்சு -எங்க வாங்குறது - பார்க்குறது:
பெருநகரங்களில்"பிலிம்சொசைட்டி" போன்றவை இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனா தேனி, விழுப்புரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற ஊர்கள்ள இருப்பது ரொம்ப அரிது. நம்மள மாதிரி ஆளுகளுக்கு வேற வழியில்லை. சொந்தமா வாங்கணும்-இரவல் வாங்கணும். இரவல்...உங்களுக்கே தெரியும். சொந்தமா வாங்கலாம்னா 300 ரூபாயில இருந்து 800 ரூபாய் வரைக்கும் சொல்றாங்க. கீஷ்டு கானத்தில வெர்சாக், குரோசாவா போன்ற இயக்குனர்களின் எல்லா படங்களும் அடங்கிய தனித்தனியான நாலு டிவிடியா விக்குராங்க (ஒரு டிவிடி 200r).சரி.. இந்திய படங்களாவது வாங்கலாம்னா அதுவும் (வங்களா மொழி படம் இருக்கான்னா அக்காவ திட்றியா சண்டைக்கு வராங்க) கெடைக்க கஷ்டமா இருக்கு. வேற என்னதான் வழி,டவுன்லோட் பண்ணனும்-பைரேடட் டிவிடி வாங்கணும்.

டவுன்லோட் செய்ய Rapidshareய் விட எனக்கு விருப்பமானதா இருப்பது கீழே உள்ள தளம் தான்.

Pasiloni           Tarkovsky           Kim Ki-duk          Antonioni        
Bertolucci       Wong Kar-wai    Fellini                    Scorsese                  
Jim jarmusch   Buñuel              Wim Wenders      David lynch  
Jodorowsky    Kubrick            Kieslowski          Yasujiro Ozu          
Bergman         Werner Herzog           Kurosawa     Truffaut     
Tarantino         Luc Godard      Francis Coppola     Cohen bro's                      
Soderbergh     Ritchie           Nolan           Kiarostami      Kitano  
Polanski          Zemeicks       Majid majidi              Makhmalbaf

இந்த மாதிரி சிறந்த இயக்குநர்களோட பல புகழ் பெற்ற படங்கள் நல்ல தரமான divx ப்ரின்ட்ல கொட்டிக் கிடக்கு. நீங்க இயக்குநர், நடிகர், நாவல் எந்த பேர வெச்சுனாலும் தேடலாம்.

தேவை: அதி வேக இணையம், "Downlaod accelerators", நீங்க டிவில பார்க்க விரும்பினா "Total Video Converter(to convert divx to VCD)".

இது போக Veoh,Veehd இதுள்ளையும் பார்க்கலாம்.

பழைய கிளாஸிக் வகைப் படங்களுக்கு Classiccinemaonline, Google Videos

கண்டிப்பா Rapidshareஐ விட வேகமா டவுன்லோட் ஆவது நிச்சயம். அளவும் divxனால கம்மி. முக்கியமா இது spyware, adware, pop-up window தொல்லை இல்லாத சைட். இது பிடிக்காதவங்க Rapidshareஐ உபயோகப்படுத்துறத விட torrentஐ உபயோகிப்பது உத்தமம். ( இதுல என்ன கொடுமைன என்ட இப்ப ப்ராட்பேண்ட் இல்ல. இதுல ஒன்னுதையும் நானும் பண்ண முடியாது. ஒரு காலத்தில பண்ணிகிட்டிருந்தேன்)

சரி...டவுன்லோட் பண்ண முடியாதவங்க.. சிறு ஊர்களவிட மதுரை, சென்னைல மலிவான விலைக்கு (20 ரூபாய்) ஒரிஜினல்ப்ளு-ரே டிஸ்க்ல இருந்து காப்பி பண்ண டிவிடிகள் கிடைக்கிறது. மதுரை-மீனாட்சி பஜார், சென்னை-பர்மா பஜார். சென்னையில கோல்ட் டிவிடியே 100 ரூபாய்க்கு விக்குறாங்க. அது போக சில கடைகள்ல 40-பக்க பட லிஸ்டே வெச்சுருக்காங்க. நம்ப விருப்பமான படத்திற்குரிய எண் சொல்லிட்டு ஒரு 10 நிமிஷம் கழிச்சு வந்தா எடுத்து வெச்சிருப்பாங்க. என்ன பெரும்பாலும் ஹாலிவூட் படங்கள் தான் இருக்கும். தேடித்தான் வேற மொழிப்படங்கள் வாங்கணும். சின்ன ஊர்கள்ல இருக்குறவங்க ஏதாவது வேலைய இந்த மாதிரி பெரிய ஊர்களுக்கு போகைல நேரமிருந்தா இங்க போய் வாங்கலாம். பெங்களூர்ல டவுன் ஹால் ரோட் வலது பக்கம் SP ரோட்ல கிடைக்கும்.

3. ஒரு படம் பார்க்குறோம். ரொம்ப பிடிக்குது. அவ்ளோதான்னு அதோட விடாம IMDBலயோ Wikipediaலையோ அந்த படத்தோட டைரக்டரின் பிற படங்கள் என்னனு பார்த்திங்கனா அடுத்த தடவ அந்த படங்கள் கிடைக்கும் போது உடனே வாங்குங்க. யார் நல்ல டைரக்டர், யாரு சிறந்த டைரக்டர் இதெல்லாம் போகப்போக பழகிரும். நெட்ல "உலகின் சிறந்த படங்கள், 50 movies to see before u die" இதெல்லாம் தட்டிப் பார்திங்கனா தெரியும். அதையும் மனசுல வெச்சுக்கலாம். முக்கியமா எல்லா கேபிள்ளையும் பேண்ட்டில் கடைசிய ஒரு சேனல் "UTV World Movies"ன்னு தெரியும். அதுல வாரத்திற்கு கொறஞ்சது ஒரு ஆறு நல்ல படமா போடுறாங்க. அதையும் பாக்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்புறம் இந்திய படங்களும் உலக படங்கள்தான். கட்டக், ரே, மிருனாள் சென், அடூர், ஜான் ஆபிரகாம்னு பல பேர் இருக்காங்க. அவங்க படத்தையும் பாருங்க. தமிழ்ல வீடு மாதிரி படங்களும் இருக்கு. நம்ம தமிழ் படம்னா சுலபமா கெடைச்சுரும். அதான் குறிப்பிடல. மேலும் இந்த நல்ல படம், நல்ல ப்ளாக், நல்ல மியூசிக், நல்ல ஏரியா .. இந்த நல்ல-வார்த்தையே என்னை பொறுத்த வரைல "Relative Term"தான். ஒருதர்கொருத்தர் வேறுபடும். அதனால நமக்கு பிடிக்குதா, எந்தவொரு எதிர்மறை எண்ணங்களையும் நம்மிடையே எழுப்பாம, யார் மேலயும் வெறுப்பை ஏற்படுத்தாத படமா இருக்கானுதான் நான் பார்ப்பேன். அது ஓடுச்சா ஓடலைய இதெல்லாம் எனக்குத் தேவையில்லை.

4. இதாங்க ரொம்ப சுலபம். நம்ம என்ன படம் பார்க்குறோமோ.. அதுதான் சிறந்த உலக திரைப்படம்னு ஒரே போடா போட வேண்டியதான். இப்ப தமிழ்ல குப்ப மாதிரி படம் எடுத்துகிட்டு இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லைனு பேட்டி கொடுக்கறது இல்லையா.. அது மாதிரிதான்.

பி.கு: இதைத் தவிர வேற நல்ல சைட்யோ(spyware, adware, pop-up Free), வழியோ இருந்தா தயவுசெய்து சொல்லுங்க.

Facebookers..

27 comments :

  1. நல்ல பதிவு நண்பா,
    மேலும் பதிவின் கமெண்டை தனியாக விண்டோவில் வருமாறு வைக்காமல் எம்பெட்டாக வைக்க பார்க்கவும்,கமெண்ட் போட எளிதக இருக்கும்.

    நான் படங்களை தரவிறக்கிதான் பார்க்கிறேன்,உங்களுக்கு மதுரையா?நான் பாதி மதுர,பாதி சென்னை.

    இவரும் நன்றாக எழுதிவருகிறார்
    http://bharathikumar.blogspot.com/

    ReplyDelete
  2. @கீதப்ப்ரியன்
    நன்றி நண்பரே..
    நீங்க சொன்ன மாற்றங்கள் செய்தாச்சு.
    மதுரை இல்லை. திண்டுக்கல்
    நண்பர் பாரதிக்குமரையும் சேர்த்தாச்சு

    ReplyDelete
  3. அத்தனையும் அருமை.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையான பதிவு, நீங்கள் சொல்வது சரிதான். மதுரை மீனாட்சி பஜார் இல்லையென்றால் நான் இல்லை. என் சம்பாத்தியத்தில் பாதி அங்குதான் இருக்கிறது :)

    பெரிய பெரிய ஆட்கள் லிஸ்டில் என் பெயரும் இருக்கிறது... மிகவும் நன்றி...

    நமக்கு சொந்த ஊர் தேனி தான்... ஆனால் வேலையில் இருப்பது பெங்களூரில்...

    திண்டுக்கலில் முதலில் நண்பர்கள் இருந்தார்கள். அப்போது பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு கடையில் தான் டி.வி.டி வாங்குவோம். இப்போது அந்தக் கடை இருக்கிறதா தெரியவில்லை...

    தொடரட்டும் கலைப் பணி...:)

    ReplyDelete
  5. @மதுரை சரவணன்
    நன்றி நண்பரே.

    @Baby ஆனந்தன்
    அந்தந்த கடைகள் எல்லாம் அப்படியே தான் இருக்கு.
    ரொம்ப நன்றி

    ReplyDelete
  6. தோழர் !
    நான் தஞ்சை அருகில் வல்லத்தில் இருக்கின்றேன் ...
    தஞ்சையிலோ திருச்சியிலோ பிலிம் சொசைட்டி ஏதேனும் இருக்கின்றதா...
    சகாய விலையில் உலக படங்களை தரும் கடைகளோ நண்பர்களோ இயக்கங்களோ இருக்கின்றதா ....
    தயவு செய்து தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ் !
    நான் கல்லூரி மாணவன் .பட்ஜெட் எனக்கு ரொம்ப முக்கியம் .

    ReplyDelete
  7. @நியோ
    வல்லம்னா பெரியாரா, சாஸ்திராவா. நம்ம நெருங்கிய நண்பர் வல்லத்தில் இருக்கார்.
    //தஞ்சையிலோ திருச்சியிலோ பிலிம் சொசைட்டி ஏதேனும் இருக்கின்றதா? தயவு செய்து தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்//

    ReplyDelete
  8. பெரியார் பல்கலை தான் தோழர் ...
    உங்கள் நண்பர் என்ன செய்து கொண்டு வருகிறார் ...
    எனக்கு இங்கு சில நான் தீர்க்கவேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன ...
    இரண்டு மாதங்களாவது ஆகுமென நினைக்கிறேன் தீர்க்கப்பட ...
    இரண்டு மாதங்கள் கழித்து அவரை சந்திக்க விரும்புகிறேன் ...
    உங்களையும் தான் ...
    குறைந்த பட்சம் அலைபேசியிலேனும்..
    இரண்டு மாதங்கள் கழித்து ...

    ReplyDelete
  9. அருமையான பதிவு.

    //பெங்களூர்ல டவுன் ஹால் ரோட் வலது பக்கம் JC ரோட்ல கிடைக்கும். //

    அது JC ரோடு இல்லை நண்பா Sadar Patrappa Road (sp road)அது தவிர மெஜஸ்டிக் national market,பர்மா பஜார்,ஹாங்காங் பஜார் போன்ற இடங்களிலும் கிடைக்கும் நன்றி.

    ReplyDelete
  10. திரு.ஜாக்கிசேகர் அவர்கள் அறிமுகப்படுத்திய பல படங்களை ரசித்து பார்த்து இருக்கிறேன்
    அவர் எழுதும் விதமே என்னை அதிகம் பார்க்க தூண்டியது!

    அவரின் முகவரி:
    http://jackiesekar.blogspot.com

    ReplyDelete
  11. @Thomas Ruban
    சட்டுன்னு ஞாபகம் வரல. அதான் மாத்தி சொல்லிட்டேன்.மாத்திறேன் ஆனா மத்த இடங்களை விட இங்க சீப் & நெறைய கலெக்சன்ஸ் இருந்த மாதிரி எனக்கு தெரிது. (ஆனா நம்ம ஊரை விட விலை அதிகம்)

    ReplyDelete
  12. @நியோ
    நண்பன் இந்த வருடம் தான் சாஸ்த்ராவில் இன்ஜினியரிங் முடித்து ஹைதராபாத்திற்கு வேலை விசயமாக சென்றுள்ளான். கண்டிப்பாக அவனுடன் தஞ்சாவூர் வர வேண்டியுள்ளது (பெரிய கோயில்). அப்போது தெரிய படுத்துகிறேன் (உங்க ப்ளாக் பார்த்தேன்)

    ReplyDelete
  13. @Saravanan MASS
    பிரதர். அவர் வலைப்பூவையும் சேர்த்தாச்சு. நன்றி

    ReplyDelete
  14. நண்பரே, இது போன்ற ஒரு பதிவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் நன்றி.

    SeventyMM & BigFlix இரண்டும்கூட நிறைய தரமான படங்களைக் கொண்டிருக்கின்றன.

    படங்களை வாங்க விரும்புபவர்கள் கோவை Hollywood DVD பாஸ்கரன் அவர்களை நாடலாம். http://worldcinemafan.blogspot.com என்ற பதிவில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

    கோவையில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் கோணங்களைத் (http://konangalfilmsociety.blogspot.com) தொடர்பு கொள்ளலாம்.

    ReplyDelete
  15. @ சு.மோகன்
    நண்பா.. முடி வெட்டவே காசில்லாம சுத்திக்கிட்டு இருக்கேன். SeventyMM & BigFlixஇக்கு எங்க போவேன்..நேக்கு யாரைத் தெரியும்...
    Anyway..உங்க கமெண்டுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்.

    ReplyDelete
  16. பாஸ்..
    இதுக்கு எதுனா கமென்ட் போடணும்னு நெனச்சா, சமீபத்திய போஸ்ட்ல போடுங்க.

    ReplyDelete
  17. ண்னா என்னா டீடேயிலு...என்னா டீடெய்லு...இன்னைக்குதான் உங்க வலைப்பூ பக்கம் வந்தேன்... என்னை உங்களுக்கு அறிமுகபடுத்திய சரவணனுக்கும் அதை சேர்த்த உங்களுக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  18. @ஜாக்கி சேகர்
    ணா..//அதை சேர்த்த உங்களுக்கும் என் நன்றிகள்// இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.உங்க ப்ளாக் எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ணு. எனக்கு தெரிஞ்சுக்க கொஞ்சம் தாமதமாயிடுச்சு. பரவாயில்ல. இனி தொடர்ந்து உங்களை தொடர்வேன்.
    Follower ஆனதுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. பாண்டிச்சேரி ரங்கப்பிள்ளை தெருவுல முத்து எலக்ட்ரானிக்ஸ் அப்டின்னு ஒரு கடை உண்டு. நிறைய கலெக்ஷன். நல்ல பிரின்ட். ஒவ்வொரு தடவையும் பத்து படம் வாங்கிடலாம். சென்னைல பத்து படம் வாங்கினா நாலு தான் பாக்குற மாதிரி இருக்கும்.

    ReplyDelete
  20. @annasarp
    பாஸ்..பாண்டிச்சேரியில இருந்துதான் பைரேடட் டிவிடி தமிழ்நாட்டுக்கு அதிகளவில் வருதுன்னு தெரியும். ஒரு சின்ன சுவாரசியமான விஷயம். என் காலேஜ் நண்பனது அண்ணன் நாமக்கல்லில் டிவிடி கடை வைத்திருக்கிறார். சில சமயம் சரக்கு எடுக்க அவன் பாண்டிச்சேரி போவான். அங்க புதுப்பட டிவிடி மாஸ்டர் காப்பி வாங்கி அதை கூரியர்ல நாமக்கல் அனுப்பிச்சுருவான். ஒரு தடவ அனுப்பப்போகைல போலீஸ்ட மாட்டிட்டான். அப்பறம்..போலீசுக்கு பத்து புது பட டிவிடியும் 500ரூ கொடுத்து தப்பிச்சு வந்தான்.
    (நீங்க சொல்றது பைரேடட் டிவிடியா இல்ல ஒரிஜினலான்னு தெரியல). Anyway வருகைக்கு நன்றி. இத யாராவது படிச்சா அந்த கடைக்கும் உங்க அறிமுகத்தால போவாங்கன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  21. அண்ணா கலைஞர் சொல்ற மாதிரி நாங்கெல்லாம் உங்க இதயத்தில் மட்டும் தானா?

    ReplyDelete
  22. @ஜோதிஜி
    அய்யய்யோ...சார்...
    //அதில் (தொடர்ந்து, அதிகளவில்) திரைப்படங்கள் குறித்து எழுதுவோர்.//
    நீங்கதான் சினிமா குறித்து எதுமே எழுதுறதில்லயே..ஏன் படங்கள் மீது விருப்பம் இல்லையா...

    ReplyDelete
  23. சார் மோர் பீர் இதெல்லாம் வேண்டாம் கொழந்த.

    உங்க மின் அஞ்சல் முகவரி கூட வருவதில்லை.

    படங்கள் பிடிக்காது என்று இல்லை. இளமைப்பருவம் முதல் அதற்கான வாய்ப்பு குறைவு. வசதிகள் வந்த போது கூட அந்த ஆர்வமும் வரவில்லை என்பது மகத்தான ஆச்சரியம்.

    ஆனால் அது குறித்து மொத்த செய்திகளையும் உள்வாங்கிக் கொண்டே தான் இருப்பேன். இது குறித்து ஏதோவொரு சமயத்தில் எழுதுவேன்.

    மற்றபடி குழந்தைகள் ஆர்வத்திற்கு தடைபோடக்கூடாது என்பதால் தொல்லைக் காட்சி கூட அவர்கள் பார்த்து முடித்த பிறகு தான் நான் தூங்கப் போகும் சமயத்தில் தான் வாய்ப்பு கிடைக்கிறது.

    முதலில் அப்பா தடை போட்டார்
    பிறகு வேலைகள் தடை போட்டது.
    இப்போது குழந்தைகள்?

    மற்றபடி ஹாலிவுட் பாலா, கார்த்திகேயன் அப்புறம் ஜெய் இவர்களின் அறிமுகத்திற்குப்பிறகு
    நீங்க பட்டாசு கிளப்பிக் கொண்டு இருக்கீங்க.

    ஒரு வேளை குழந்தைகள் கல்லூரி போகும் போது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உங்களைப் போன்றவர்களின் இடுகை எனக்கு பயன்படக்கூடும்.

    நண்பர்கள் இயக்குநராக இருக்கிறார்கள்.

    சென்னை சமீபத்தில் சென்ற போது ஒரு நாள் முழுக்க எடிட்டிங் முதல் இறுதிக்கட்ட இசை கோர்ப்பு வரைக்கும் நடக்கும் ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் இருந்தேன். அவரும் ஒரு பிரபல்யம்.

    மற்றவர்கள் ஹா வென்று பார்க்க நான் மட்டும் அவரிடம் (தசாவாதாரம் முதல் பல படங்கள் அவர் பணிபுரிந்த )பின்னால் உள்ள பல நிகழ்வுகளைப் பற்றி நான் படித்த விசயங்களைஅடிப்படையாக வைத்து விடாமல் கேட்டுக் கொண்டுருந்தேன்.

    அழைத்துக் கொண்டு சென்றவன் நொந்நு போய்விட்டான்.

    இதற்கு மேல் சில விசயங்களை எழுதினால் சுய சொரிதல் ஆகிவிடும்.

    ReplyDelete
  24. @ஜோதிஜி
    சார்...சீ...அய்யா...
    wordsworth கவிதை குறித்து "poetry is the spontaneous overflow of powerful feelings" என்று சொன்னதாக படித்திருக்கிறேன்..

    உங்கள் எழுத்திலும் அதுமாதிரி ஒரு spontaneity தெரியது. டக்கு டக்குனு வார்த்தைகள் விழுந்துருக்கு. நீங்க திரைப்படங்களும் - அது சார்ந்த உங்க அனுபவங்களும் என்று ஒரு பதிவு எழுதவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்குறேன்.

    ReplyDelete
  25. unga cell no kidaikuma kulantha?
    9842192612 idhu en number mudindhal SMS anupunga naan kuupiduren

    ReplyDelete
  26. இன்னிக்கி வரைக்கும் என் வலைப்பூவை எங்கயுமே உம்பட ப்ளாக்ல காணோம். இருல காசு வெட்டி போட்டு உன் சாதனத்தை பழுதாக்குறேன் :-) #காடு

    ReplyDelete
  27. @மரா

    என்னது.நீங்க ப்ளாக் எழுதுறீங்களா ???? ஜெயகாந்தன் மாதிரி...அல்லா வெட்டி பசங்களும் இப்பலாம் ப்ளாக் எழுதுறாங்க...நா இதுல சேர விரும்பல ன்னு, நீங்க ரெண்டு வருஷம் முன்னாடியே ஒதுங்கிட்டதா பேசிகிட்டாங்களே

    ReplyDelete