Saturday, July 31, 2010

அறிவியல் புனைவுப் (Sci-Fi) படங்கள்-கதைகள்


நான் யார்யாருடைய blogஐ புக்மார்க் வெச்சு விரும்பி படிக்கிறேனோ அவர்கள் எல்லாம் பின்னூட்டமிட்டது, என்ன சொல்றதுனே தெரியல...ரொம்ப நன்றி. அண்ணன் கருந்தேள் தன் blogஇல் முதல்ல லிங்க் கொடுத்தது நிறைய பேர் பார்க்க உதவியது. அவருக்கு தேங்க்ஸ்.
...............................
                              எனக்கு மிகப் பிடித்த FIlm Genreனு சொன்னா, நிச்சயமா Sci-Fi தான்.Sci-Fi புத்தகங்களோ படங்களோ அது எதுவாக இருப்பினும் என்னை மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகின்றன. Sci-Fi கதைகள் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாய் இருந்துள்ளன.  எனவே நான் படித்தவற்றிலிருந்தும் பார்த்தவற்றிலிருந்தும் நான் தெரிந்து கொண்டதை இங்கே கொட்டலாம் என்று நினைக்கிறேன். இது முழுக்க நான் புரிந்து கொண்டதை வைத்து எழுதுகிறேன். தெரிந்தவர்கள் திருத்தினால் மகிழ்ச்சி.


விஞ்ஞானக் கதைகளின் பிதாமகன்கள்:
"Father of Science-Fiction" என்று நான்கு பேரை சொல்கிறார்கள்.
  • Hugo Gernsback - இவர் பெயரில்தான் Sci-Fiக்கான Hugo விருது வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறையின் முன்னோடி என்று கருதப்படுபவர்.
  • Jules Verne - எழுதியதில் சில Journey to the center of the earth, Around the world in 80 days, From earth to moon, 20000 leagues under the sea
  • H.G.Wells - எழுதியதில் சில The Invisible man, War of the Worlds, The Time machine 
  • Edgar Allan Poe - வெறும் கால இயந்திரம், ஏலியன்ஸ் என்று எழுதாமல் mystical புனைவுக் கதைகளை எழுதியவர்.
இதில் கடைசி மூவரைப்பற்றி அனைவரும் அறிவோம். அத்திரைப்படங்களையும் பார்த்திருப்போம்.இது போக கலிவேர்ஸ் டிராவல், ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


இரண்டாம் கட்டம்:
இக்கால கட்டத்தில் தான் அறிவியல் வளர்ச்சி அபாரமாக இருந்தது. இது Sci-Fi கதைகளின் பொற்காலம் என்ற கருதப்படுகிறது "Big 3 of Science-Fiction" என்று அழைக்கப்படும்
  • Issac Asimov - Robot series , Foundation series,3 law of Robotics போன்ற எண்ணற்ற படைப்புகளையும் கருத்துக்களையும் தந்தவர். (இவரது கதைகள்தான் எந்திரன் படம்னு நெனைக்கிறேன்)
  • Arthur.C.Clarke-Geostationary satellite orbitக்கு இவரது கருத்துக்கள் மிகப்பெரும் பங்காற்றியுள்ளன. (Clarke orbit என்றே ஒன்று உண்டு). 2001: A Space Odyssey, அதன் sequels இவர் எழுதியதுதான்.
  • Robert Heinlein - Starship Troopers .. நான் இவரது கதைகளை படித்ததில்லை.

Carl Sagan இக்காலத்தின் முக்கியமான Cosmologist விஞ்ஞானி. அவரது புகழ் பெற்ற புத்தகம்தான் "COSMOS". Extra Terrestrial Life(ET) பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளவர்.

மூன்றாம் கட்டம் & தற்கால கட்டம்:
இக்காலகட்டத்தில்தான் Sci-Fiக்கேன பல பிரிவுகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் Philip.K.Dick, Ray Bradbury, Anthony Burgese, William Gibson, Kurt Vonnegut போன்றோர். சமீபத்தில் பல பின்-நவீனத்துவ எழுத்தாளர்களை இதில் சேர்க்கிறார்கள். 

வகைகள்: (நான் புரிந்து கொண்ட வரையில், படித்ததை வைத்து)

Hard-Core Science Fiction:
  • கடினமான அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கியது
Arthur.C.Clarke நாவல்கள் --- 2001 A Space odyssey ---- Stanley Kubrick


Issac Asimovஇன் பல கதைகள் ----- I, Robot(Will Smith) அவரது கதையைத் தழுவியது. எந்திரன் கதை கிட்டத்தட்ட இதுதான்னு நினைக்கிறேன். கிராபிக்ஸ் சூப்பரா இருக்கும்.


Soft-Core Sci-Fi:
  • உளவியல், பொருளாதாரம், சமூகம், அரசியல் சார்ந்த-அறிவியல் கடினத்தன்மை சற்று குறைந்த பிரிவு
  •  Sci-Fi என்றால் கால இயந்திரம், ரோபாட், ஏலியன்ஸ் மட்டுமல்ல என்பதற்கு சிறந்த உதாரணம் இப்பிரிவு
Ray Bradbury ---- Fahrenheit 451 --- Traffaut (அவர் இயக்கிய ஒரே ஆங்கிலப்படம், Fah 451 என்பது புத்தகத்தாள்களின் எரியும் வெப்பநிலை)

George Orwell ---- 1984 ---- சிறந்த ஆனால் Anti-Communist novel (Animal farmம் கூட)
Anthony Burgese ----  A Clockwork Orange ---- Kubrick (நான் முழுதாக இன்னும் பார்க்கவில்லை )



Children of Men ---- Alfonso cuaron. (இதில் வரும் Tracking shot ரொம்ப பிரசித்தம்)
Solaris ----- Tarkovsky's Visual stunner. புரியறதுக்கே சிரமப்பட்டேன்

Alphaville ----- Jean luc godard (நான் முழுதாக இன்னும் பார்க்கவில்லை )


Cyberpunk:
  • எதிர்மறை எண்ணங்கள் கொண்ட, இயந்திரங்களால் ஆளப்படும், விரக்தியுற்ற, மனிதன்-இயந்திரம் சார்ந்த பகுதி
  • இதில் முக்கியமானவர் Philip.K.Dick. இவரது பல கதைகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. 
Blade Runner  based on Do Androids dream of electric sheep(Philip.K.Dick) ---- Ridley Scot. Ivangelis எலேக்ட்ரோனிக் மியூசிக்கல்ல கலக்கிய படம். அப்பவே தத்ருபமான கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரியான த்ரில்லர் கதை. 

Minority Report based on short story Minority Report (Philip.K.Dick) ---- Steven Speilberg. இதுவும் ஸ்பியில்பெர்க்ன் அற்புதமான visionaryல ஒன்னு. இந்த படத்தின் கான்செப்டும் அது எடுக்கப்பட்ட விதமும் எனக்கு மிகப்பிடித்திருந்தது.


மற்ற குறிப்பிடத்தக்க படங்கள் The Terminator, The Matrix, Alien


Alien Invasion:
  • பேரே சொல்லும் எந்த மாதிரி கதை என்று.  H.G.Wellsதான் மூலகர்த்தா(War of the Worlds)
  • இதில் நான் ரசித்த சில திரைப்படங்கள்:
The Day earth stood still (1951). ரீமேக்(2009) இது அளவிற்கு என்னை ஈர்க்கவில்லை. அக்காலத்திலேயே சொந்த நாட்டின் (USA) அட்டுழியங்களை சுட்டிக்காட்டிய படம்.

Speilbergன் (E.T, Close Encounter of the third kind). ஸ்பியில்பெர்க்ன் அனைத்து படங்களிலும் (வார் ஆப் தே வேர்ல்ட்ஸ் நீங்கலாக) அனைத்து sci-fi படங்களிலும் ஏலியனை நல்ல மாதிரியே காட்டுவார்.

Signs (ஷயாமளன் உருப்படியா எடுத்த ரெண்டு படத்தில் ஒண்ணு. கடைசி வரை ஏலியனைக் காட்டாமல் சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்)

Apocalyptic/Post Apocalyptic:
  • நியூக்லியர் வார், வைரஸ் தாக்குதல் அதற்குப் பிறகு நடப்பது. (எப்பவுமே யு ஸ் தான் காமிப்பாங்க)
I am legend, 28 Days-Weeks later, The Road (புலிட்சர் பரிசு பெற்ற நாவலை தழுவியது)


Parallel-Multiverse-Universe Concepts:
  • மிகக்கடினமான பிரிவு. ஒரு அண்டம்(Universe) போல் பல அண்டங்கள் (Multiverse) இருக்கலாம்-அங்கு நம்மைப்போலவே ஒருவர் இருக்கலாம்; Transportation, Hyperspace போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.
  • Jetli -- The One, Frank Capra --- It's a wonderful life போன்ற படங்கள் உதாரணம்.
  • இதில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, இலக்கியப் பத்திரிகைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹேவை (The Garden of forking paths) சொல்கிறார்கள்.
(நான் பிசிக்ஸ் மேஜர். அதனால Interstellar, Cosmology, Singularity போன்றவற்றில் ஆர்வம் அதிகம்) 

இதில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். இதில் கடினமானது என்று நான் நினைப்பது


2001 A Space odyssey -- Stanley Kubrick                                                   Solaris --Andrei Tarkovsky   

இந்த இரு படங்களையும் இருமுறை பார்த்துள்ளேன். திரும்ப ஒரு ரெண்டு தடவை பார்த்தாதான் தெளிவாக புரியும்னு நினைக்கிறேன். மற்ற அனைத்துப் படங்களையும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றியும் வேறு சில Sci-Fi படங்களைப் பற்றி பகிர்ந்து
கொண்டால் மகிழ்ச்சி.

தமிழில் அறிவியல் புனைவுக் கதைகள் என்றால் அவரைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எல்லோர் ஞாபகதிற்கும் வரும் பெயர் - சுஜாதா. அவரின் பல அறிவியல் கதைகள் எனக்கு பிடிக்காவிட்டாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் அளிக்கும் எழுத்து என்பது உண்மை. மேலும் Sci-Fi வகைக்கதைகளை தமிழில் பெருமளவு புகுத்தியவர். ஜெயமோகன் கூட"விசும்பு" என்ற அறிவியல் புனைவுக் கதைகளை 4-5 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்(போன மாசம் லைப்ரரில பார்த்தது).  தமிழில் Sci-Fi படங்கள் எனக்கு தெரிஞ்சு வந்ததில்லை, ஒன்றைத் தவிர....

யூகிக்க முடிகிறதா.... 1963ல் எம் ஜி ஆர் நடித்த "கலையரசி". எங்க அப்பாகிட்ட ஏதோ பேசிக்கொண்டிருக்கைல எதேச்சியா இந்த படத்தப் பத்தி சொன்னார். ஆச்சரியமாக அடுத்த நாளே ராஜ் டிஜிட்டல்ல போட்டாங்க (கோடு விழுந்த பிரிண்ட்). அப்பவே பறக்கும் தட்டு, வேற்று கிரகம்னு சூப்பரா எடுத்திருந்தாங்க. முடிஞ்சா இதையும் பாருங்க...
Facebookers..

13 comments :

  1. ;-) கலையரசி படம் பற்றி சுஜாதா பல வருடங்களுக்கு முன் எழுதியது நினைவு வருகிறது ;-)

    H.G Wells, Jules Verne ஆகியவர்களின் கதைகள் நிறையப் படித்திருக்கிறேன் (நன்றி - பைகோ க்ளாஸிக்ஸ்).. எட்கார் ஆலன் போவின் கதைகளும் கவிதைகளும் கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன். அவரது கதை ஒன்று, நமது லயன் காமிக்ஸில் கூட மொழிபெயர்க்கப்பட்டு வந்தது.. அந்தக் கதையின் ஆங்கிலப் பெயர் - The Murders in Rue MOrgue - மிக வித்தியாசமான கருவைக் கொண்ட கதை அது..

    பெர்ஸனலாக எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர், Poe.

    அப்புறம், நம்ம அஸிமோவ் பத்தின ரெஃபரன்ஸ், எந்திரன் பாட்டுல வருது கவனிச்சீங்களா ?? :-)

    நீங்கள் குறிப்பிட்டுள்ள கொதார் மற்றும் டர்க்காவ்ஸ்கி இருவரும், நவீன சினிமாவுக்குப் பெரும்பங்கு ஆற்றியவர்கள்..

    பெர்சனலா சொல்லப்போனா, ஸ்பீல்பெர்க்கின் மைனாடிரி ரிபோர்ட், எனக்கு சுத்தமா புடிக்காத படங்கள்ல ஒண்ணு ;-) AIயும் தான் ..

    இலக்கியம், தீவிர சினிமான்னு கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க.. பின்னுங்க ;-)

    பி.கு 1 - ஆங்கில சினிமாவில் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன், ஒரு சமுத்திரம். எனக்கு மிகப்பிடித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில், ஈவண்ட் ஹொரைஸன் ஒன்று.. அது நிறைய பேருக்குப் பிடிக்காமல் இருக்கக்கூடும்.

    பி.கு 2 - குட்டிப்பிசாசு படத்தை ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்ல நீங்க சேர்க்காதத பார்த்து, ராம நாராயணன் இதோ ஆட்டோல வந்துக்கினே கீறாரு... உஷார் !!! ;-)

    பி.கு 3 - என்னோட விருப்பப்பாடமும் ஃபிஸிக்ஸ் தான் ;-) . . கல்லூரி நாட்களில், ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்ல பழியாக் கிடந்தேன் ;-)

    ReplyDelete
  2. @ கருந்தேள் கண்ணாயிரம்
    வாங்கண்ணா..
    நீங்க சொன்னா ஈவண்ட் ஹொரைஸன் (சாம் நீல், பிஷ்பர்ன் நடித்ததுதானே)டைரக்டர் தான் ரெசிடென்ட் ஈவில் எடுத்ததா தெரியுது.

    நீங்க டர்க்காவ்ஸ்கி அந்திரே ருபெலவ் பார்த்திருக்கிங்களா? பல பேர் இதைப்பற்றி எழுதி பார்த்திருக்கிறேன்.

    ஹாலிவுட்டை விட ஐரோப்பிய நாடுகள் தான் சினிமாவை ஒரு கலையா பாவிச்சு மேம்படுத்தி இருக்காங்க போல.

    ReplyDelete
  3. நண்பரே,

    பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது உங்கள் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  4. @கனவுகளின் காதலன்
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. எழுதுங்க, எனக்கு சயின்ஸே தெரியாது. அதனால் நீங்க எழுதறதைப் படிப்பேன். புரியலைன்னா கேட்டுக்கறேன்.

    ReplyDelete
  6. இந்தப் படங்கள் எல்லாம் நீங்க பார்த்ததா??

    கொழந்த அழகா இருக்கு! :))))))))

    ReplyDelete
  7. நண்பரே சிறப்பான பதிவு.

    ReplyDelete
  8. @கீதா சாம்பசிவம்
    ஒருசிலவற்றைத் தவிர அனைத்தயும் பார்த்திருக்கிறேன்.

    @வெறும்பய
    நன்றி நண்பரே. (ஒரு வெட்டிப்பய வெறும்பயலுக்கு நன்றி சொல்றேன்)

    ReplyDelete
  9. பார்த்தா கொழந்தையா தெரியலையே.. நல்ல பதிவு.. கலையரசி என் ஏரியாவில் உள்ள ஜெயராஜ் தியேட்டரில் கூட ரிலீ ஆகி ஒடியது என்று சொன்னார்கள். அந்த படம் பெரிய வெற்றிபடமில்லையாம்.. வாழ்த்துக்கள் கொழந்த..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  10. @shortfilmindia.com
    நன்றி. இப்பதான் உங்க ப்ளாக்ஆ எல்லாம் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டிருந்தேன். நீங்களே வந்தமைக்கு நன்றி. (12 வயசு பயல கொழந்தைனு சொல்லலாம?)

    ReplyDelete
  11. நானும் 2001 A Space odyssey படத்தின் இறுதிகட்ட காட்சி விளக்கத்தை தேடிக்கொண்டு இருக்கிறேன் :)

    ReplyDelete
  12. @பிரசன்னா..
    நண்பா..நீங்கள் நீட்ஷே படித்திருக்கீர்களா..இதற்குரிய விளக்கம் அவரிடம் உண்டு என்று குப்ரிக் கூட கூறியுள்ளார்..

    ReplyDelete
  13. வணக்கம் தோழரே உங்களை கொள்ள வேண்டும் .எப்படி முடியும் ? தொலைபேசி என் ?

    ReplyDelete