Tuesday, July 27, 2010

வாடிவாசல் & கிழவனும் கடலும்


நான் பெங்களூர்ல வேலை பார்த்துகொண்டிருந்தப்போ, என் அப்பா நாகர்கோயிலில் வேலை பார்த்துகொண்டிருந்தார். மாசத்துக்கு 2 முறையாவது ஏதாவது புத்தகத்த வாங்கி – அவரு படிக்கிறாரோ இல்லையோ- முதல்ல எனக்கு அனுப்புவார். அப்புடி அனுப்பியதுதான் வாடிவாசல் – கிழவனும் கடலும். ரெண்டுமே ஒரே themeனு சொல்லலாம்னு நெனைக்கிறேன். . ரெண்டுமே காலச்சுவடு வெளியீடு. மொழிப்பெயர்ப்பும் சுவாரசியமாக உள்ளது. கிழவனும் கடலும் சின்னப்பசங்களுக்கு பரிசளிக்க அருமையான புத்தகம்..

வாடிவாசல்:


சி.சு.செல்லப்பா அவர்கள் எழுதியது. ஜல்லிக்கட்டு பற்றி அற்புதமாகவும் தத்ரூபமாகவும் எழுதப்பட்டுள்ளது. தன் தந்தையைக் குத்திய காரிக்காளையை, பிச்சி என்பவன் எப்படி அடக்குகிறான் என்பதே கதை. இறுதியாக அடக்கப்பட்ட காரிக்காளையை, அதை வைத்திருந்த ஜமீன்தாரே சுட்டுக் கொல்கிறார். பல இடங்களில் விலங்குகளுக்கே உரிய வெறியும், மனிதர்களுக்கே உரிய சாதி வெறியும் வெளிபடுவதைக் காணலாம். ஜமீன்தார் காளையை கொல்வதைக் கூட இதன் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே படிப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் நாவல் இது.எளிமையான அதே சமயம் வட்டார மொழியுடன் எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்து 3 ஆண்டுகள் ஆனாலும் பசுமையாக நினைவிலிருக்கின்றது.

இதை எழுதிய சி.சு.செல்லப்பா அவர்கள் பற்றி ஒருமுறை உயிர்ம்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியபின்பு அதிகமாக தெரிந்து கொண்டேன். ஆனால் அவருக்கு இந்நாவலை எழுத தூண்டியது எர்னெஸ்ட் ஹெமிங்வேன் The Sun also Rises-என்று கிழவனும் கடலும் படிக்கும் போது தெரியாது.

கிழவனும் கடலும்:

ஒரு கிழவனுக்கும் மீனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய நாவல். நாவல் முழுவதுமே நாமும் கடலில் சந்தியாகு கிழவருடன் பயணிப்பதை போன்ற உணர்வைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கிழவர்-தனிமையில் புலம்புவதும், இருநாட்கள் தனி ஆளாய் மிகப் பெரிய மீனுடன் போராடிக் கொல்வதும்(பின்பு வருந்துவதும்), கைகள் மரத்துப்போனலும் தைரியத்துடன் இருப்பதும், அவ்வப்போது பேஸ்பால் பற்றி நினைப்பதும்- நமக்கு மிகவும் நெருக்கமானவராக மாறிவிடுகிறார்.

எர்னெஸ்ட் ஹெமிங்வே–புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் படித்ததிலிருந்து தெரிந்துகொண்டது- பல சமயங்களில் சொந்த அனுபவங்களையே (முதல் உலகப்போரில் இத்தாலியப் படைகள் சார்பில் ஆம்புலன்ஸ் டிரைவர் – A Farewell to Arms, பத்திரிகையாளர் - The Sun Also Rises ) நாவலாகவோ, சிறுகதையாகவோ (பெரும்பாலான எழுத்தாளர்கள் அப்படித்தான்) எழுதியுள்ளார். இன்னும் பல எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதியதுலிருந்தும் தெரிந்து கொண்டேன்.

மேலும் அவரைப்பற்றி வாசிக்க:
1. About Ernest Hemingway
2. Ernest Hemingway

என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இயற்கையை நேசித்தவர்; அனுபவித்து அதை எழுத்தில் கொண்டு வந்தவர்,

“The world is a fine place and worth fighting for,

A man can be destroyed but not defeated,

Every man's life ends the same way. It is only the details of how he lived and how he died that distinguish one man from another”

போன்ற வார்த்தைகளை உதிர்த்தவர் – 2 முறை தற்கொலைக்கு முயன்றதுதான். (2ம் முயற்சியில் இறந்தார் அதுவும் shotgunஐ பயன்படுத்தி).

எஸ்.ராமகிருஷ்ணன் சி.சு.செல்லப்பா பற்றி எழுதியது இணையத்தில் கிடைக்குமா என்று தேடியபோது இந்தப் பதிவு கிடைத்தது. இதை மறுபடியும் ஒருமுறை வாசிக்கும்போதுதான் செல்லப்பாவிற்கு ஹெமிங்வேவை மிகப்பிடிக்கும் என்று தெரிந்தது..

கிழவனும் கடலும் (The old man and the sea) மூன்றுமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது..

1.

The old man and the sea, 1958(கவனிக்க நாவல் எழுதப்பட்டது 1951) - இருமுறை அகாடெமி அவார்ட் வாங்கிய அக்கால நடிகர் Spencer Tracy நடித்தது. (என்னிடம் உள்ளது.அருமையான படம்+நடிப்பு)

2.

The old man and the sea, 1990 – Anthony Quinn நடித்தது

3. The Old man and the Sea (1999) – Russian Animated short film

நம்மூரில் வாடிவாசல் போன்று திரைப்படமாக்க அனைத்து அம்சங்களும் உள்ள நாவலை படமாக்க ஏன் யாரும் முன்வருவதில்லை?
Facebookers..

4 comments :

  1. க்ளீக் செய்தா அடுத்த பேஜா கமெண்ட் போடற இடம் வரும் போல செய்யுங்க திரும்ப லோட் ஆகி அப்பறமா கமெண்ட் போடவும் கஷ்டம் தான்..
    கொழந்தைய அப்பா நல்ல புத்தகங்கள் குடுத்து வழிப்படுத்தரார்ன்னு தெரியுது பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. இரு நாவல்களும் படித்திருக்கிறேன். அருமையான ஒப்பீடு.

    ReplyDelete
  3. @முத்துலெட்சுமி & @vendan
    realy very sorry..

    ஒரு வேளை இதைப் படிச்சிங்கான, நான் ப்ளாக்ஐ டிசைன் செய்றதுளையே இருந்ததுனால இந்த கமெண்ட்களை கவனிக்களை. எதேச்சையாக பார்க்க நேர்ந்து அப்புறம் தான் strike ஆச்சு.

    ReplyDelete
  4. வாடி வாசல் சி.சு.செல்லப்பாவோடது மொழிபெயர்ப்பு இல்லையே?? கிழவனும் கடலும் தான் மொழிபெயர்ப்பா?? மூலம் யாரோடது??

    ReplyDelete