Saturday, July 31, 2010

Aguirre The Wrath of God: உன்மத்தம்


4 வயசில என் அப்பா First Bloodக்கு வீட்டுக்கு பக்கத்தில புதுசா ஆரம்பிச்ச அன்னை அபிராமி தியேட்டருக்கு கூட்டிட்டு போனார். stallone ட்ரக் மேல குதிப்பது இன்னும் ஞாபகமிருக்கு. ரெண்டு பேரும் தமிழ் படத்த விட இங்கிலீஷ் படம் பார்த்ததுதான் அதிகம். மதுரைக்கு ஏதாவது வேலைக்கு போனா மாப்பிளை விநாயகர் தியேட்டருக்கு போவோம். அங்க வாசல்ல ஸ்லேட்ல எழுதிப் போட்டிருக்கும் கதைச்சுருக்கத்த எக்கி எக்கி பார்த்துகிட்டிருப்பேன். ரோஜா படம் வந்தப்ப ஒபெனிங் சீன்ல வரும் cinematographyய பார்த்து அப்பா "ஆ ஊ" ரசிப்பார். நடிகர்களை வெச்சு படம் பார்க்கேல இது பாலு மகேந்திரா படம்னு பார்ப்பார். அவர் வளர்த்துவிட்ட இந்த கிறுக்கு இப்ப முத்தி போய் நிக்குது.

                 நா ப்ளாக்னு வாசிக்க ஆரம்பிச்சு 2 மாசமிருக்கும். அதுல பல பேர் படங்களைப் பத்தி எழுதுறத படிக்கும் போது நானெல்லாம் எந்த மூளைக்குனு தோணும். இருந்தாலும் நான் ரசித்த திரைப்படங்களைப் பற்றி எனக்கு நானே recall பண்ணிக்கிற மாதிரி இதை எழுத ஆரம்பிக்கிறேன். யாராவது தப்பித்தவறி வாசிச்சிங்கனா, இந்த படங்கள பார்த்திருந்தா உங்க கருத்துக்கள சொல்லுங்க; இல்லையா இந்த படங்கள பார்க்கணும்னு நெனச்சு அத என் பதிவும் உறுதிபடுத்தினா மிக்க மகிழ்ச்சி. இதோட முடிச்சுக்கிறேன்.
.............................
                                                            
                                                                       என்ன சொல்ல? சில படங்களின் தாக்கம் சில நாட்கள் வரை இருக்கும்; சிலது மாதங்கள்; சிலது வருசங்கள். இது அப்படி ஒரு படம். ஒருமுறை சாரு நிவேதிதா உயிம்மைல (தசாவதாரம் விமர்சனம்னு நினைக்கிறேன் ) கிளாஸ் கின்ஸ்கி பற்றி எழுதியிருந்தார். எனக்கு இந்த கின்ஸ்கி, போலன்ஸ்கி, கீஸ்லொவ்ஸ்கி -அப்படிப்பட்ட பெயர்களின் மேல ஒரு ஈர்ப்பு. அப்பறம் கின்ஸ்கி பத்தி தேட ஆரம்பிச்சது வெர்னர் ஹெர்ஸாக்குல போய் முடிச்சது. இந்த படத்த பத்தி படிச்சு கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா டவுன்லோட் பண்ணிப் பார்த்தேன்.
                                     கதை 1560ஆம் வருஷம் ஸ்பானிய படை, சிறைப்படுத்தப்பட்ட பழங்குடியின இந்தியர்களோடு பெரு நாட்டின் அடர்ந்த காட்டிற்குள் (அடர்ந்த காடுனா மிக அடர்ந்த காடு பிசாரோ என்பவனது தலைமையின் கீழ் செல்கிறார்கள். அவர்கள் எதைத்தேடிச் செல்கிறார்கள். தங்கப்புதையல் உண்டு என்று நம்பப்படும் எல்டோரடோவை நோக்கி. இந்த கூட்டத்துல கார்வால்ன்கிற பாதிரியாரும் உண்டு. அவரது பார்வைலதான் கதை சொல்லப்படுகிறது. அவரது பயணக்குறிப்புகள்தான் இக்கதையின் மூலம் என்று சொல்கிறார்கள். இதில் பிசாரோ - முதல் நிலைத் தளபதி; அகுர்-இரண்டாம் நிலைத் தளபதி.கடும் போராட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளறாங்க. வழியில் சிலர் இறக்க நேர பிசாரோ - முதல் நிலைத் தளபதி பயணத்தை முடித்துக்கொள்ள நினைக்கிறான். ஆனால் அகுர் அதை எதிர்த்து இன்னொரு ஆளை எல்டோரடோவின் அரசராக முடிசூட்டுகிறான் (அது செம ரகளையான காட்சி). பிசாரோவை கொடூரமாக கொல்கிறான். பின் அவர்கள் காட்டிற்குள் செல்வதும் நரமாமிசம் தின்னும் ஆதிவாசிகளிடம் மாட்டிக் கொள்ளத்தெரிவதும் (ஒரு கறுப்பு நிற அடிமையை நிர்வாணமாக ஓட விட்டு ஆதிவாசிகளை பயப்படுத்துவார்கள்). ஒரு சீன்ல இரு வீரர்கள் இந்தாளுட்ட இருந்து எப்படி தப்பிச்சுப் போறதுன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. அதைக் கேட்ட அகுர் சொல்லும் டயலாக்.

அகுர்: That man is a head taller than me. That may change

                                     பல தடைகளைத் தாண்டி ஒரு ஆதிவாசியிடம் தங்கத்தை பார்க்கிறார்கள்.அப்பொழுது அந்த பாதிரியாரும்கூட ஆசைப்படுகிறார். அதன் பின் அக்குழுவிற்கு என்ன ஆனது? அகுர் என்ன ஆனான்? தங்கம் கிடைத்த இதற்கெல்லாம் விடைகான படத்தைக் காண்பது உத்தமம்.

                                  
படத்தின் ஆரம்ப 5 நிமிட காட்சிகளும்+இசையும் மிக முக்கியம் (அந்த mystical இசையைக் கடைசிக்கட்டத்திலும் உபயோகப்படுத்திருப்பார்கள்.இது 1972ல் எடுக்கப்பட்டது. அக்காலத்திலேயே எப்படி இது சாத்தியமாயிற்று என்று நான் திறந்த வாய் மூடாமல் அந்த stunning visualsஐ பார்த்து மிரண்டிருக்கிறேன். அந்த காட்டாற்று வெள்ளத்தின் சாரல் முகத்தில் தெறிப்பதை உணர்வீர்கள்.

                                            
கின்ஸ்கி நடிப்பைப் பற்றி நான் சொல்வதை விட பார்த்தால் தான் அந்த வீரியம் புரியும். படம் முழுக்க வெறிபிடித்த ஆளாகத் தன்னை வெளிப்படுத்தியிருப்பார். அகுரின் தங்கத்தின், அதிகாரத்தின் மீதுள்ள வெறிதான் படத்தின் அடிநாதம். படத்தில் உண்மையான இந்தியர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று வலைத்தளம் கூறுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர்கள் பட்ட கஷ்டங்களை Wikipedia, IMDB போன்ற வலைத்தளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். படத்தில் வரும் வெள்ளம் உட்பட அனைத்தும் உண்மை. இசையில் பறவைகளின் ஒலியைக் கூட அப்படியே கொடுத்திருப்பார்கள். அற்புதமான இசை. இந்த படம் நிச்சியமாக பார்பவர்களுக்கு ஒரு பூரண அனுபவத்தைத் தரும். இந்த படம் பல விஷயங்களை உணர்த்தும். அது பார்வையாளர்களை பொருத்து மாறுபடும். (எல்லா நல்ல படமும் அப்படித்தான்). Passion for cinema - ஈடுபடுகின்ற செயலின் மீது(இது எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியதுன்னு நினைக்கிறேன் அது எந்தத் துறையா இருந்தாலும் - சினிமா, எழுத்து, விளையாட்டு, படிப்பு, ஏன் ப்ளாக் கூட) அர்ப்பணிப்பு,ஆர்வம்,நேசிப்பு உள்ள - ஒரு டைரக்டர் எப்படி படம் எடுப்பார் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த சான்று.


பி.கு: இத எழுதி முடிச்ச உடன், "வெர்னர் ஹெர்ஸாக், க்ளாஸ் கின்ஸ்கி" கூகிள்ல தேடினபோது படித்தது.
s.ramakrisnan
s.ramakrisnan
கருந்தேள் கண்ணாயிரம் (இதை அவர் எழுதிய போதே படித்திருக்கிறேன்)
கனவுகளின் காதலன் (இதையும் அவர் எழுதிய போதே படித்திருக்கிறேன்)
கதிர்வீச்சு
Facebookers..

14 comments :

  1. வாழ்த்துக்கள். நல்லதொரு அறிமுகம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

    ReplyDelete
  2. அண்ணா... தலைவா.... தெய்வமே... Aguirre என்னோட கனவுப் படங்களில் ஒன்று. இதை டௌன்லோட் செய்யாமல், டிவிடிக்கு ஆர்டர் செய்து, அதில்தான் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன். டிவிடி என் கையில் இன்னும் இரண்டு வாரங்களில் கிடைக்கும் ;-)

    அட்டகாசமான ஒரு படத்தோடு இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறீர்கள். . இப்படியே பட்டையைக் கிளப்ப எனது வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.. ;-)

    ReplyDelete
  3. அப்புடியே இந்தத் தமிழிஷ், தமிழ்மணம் பட்டைகள் ஆட் செய்துட்டீங்கன்னா, இன்னும் நாலு பேருக்கு இது பரவும். என்னோட ப்ளாக்லயும் உங்க லின்க் போட்டாச்சி ;-)

    ReplyDelete
  4. @King Viswa..
    நீங்க, அண்ணன் கருந்தேளும் கமெண்ட் போடுறப்ப வலைப்பக்கத்தை மேம்படுத்திகிட்டிருந்தேன். அதான் உடனே பார்க்கலே. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    @கருந்தேள் கண்ணாயிரம்
    இப்பதான் வலைத்தளதத்தில தவழவே ஆரம்பிச்சிருகேன். அதற்குள்ள உங்களைப் போல மூத்தவர்கள் Follower ஆவது மகிழ்ச்சியாக உள்ளது. பட்டைகளை சீக்கிரம் add செஞ்சுறேன். உங்களது விமர்சனத்தை ரெண்டு வாரங்களில் எதிர்பார்க்கிறேன்.

    உங்க siteக்கு ஏற்கனவே Followerஆ sign-in ஆனேன். ஆனாலும் இந்த follower procedure சரியா எனக்கு பிடிபடல.

    ReplyDelete
  5. @கருந்தேள் கண்ணாயிரம்

    Followerஆக வேண்டிய லிஸ்ட் பெருசா வெச்சிருக்கேன். சீக்கிரம் முழுசா புரிஞ்சுக்கிட்டு செய்றேன்

    ReplyDelete
  6. ஆரம்பமே டாப் கியர்.. சூப்பரா எழுதி இருக்கீங்க... கலக்குங்க... உங்க பிகாஸ்ஸா லிஸ்ட் சூப்பர்.. அதுல இருக்க பல படங்களோட விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  7. நண்பரே,

    நல்வரவு. தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  8. ஓப்பனிங்லயே ரிப்பனை கட் பண்ணிடீங்களே.அருமையான பகிர்வு

    ReplyDelete
  9. @ஜெய்
    ரொம்ப நன்றி.உங்களது மெமென்டோ விமர்சனத்தை எல்லாம் படித்து - இப்படி கூட எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

    @கனவுகளின் காதலன்
    உங்களுக்கு லிங்க் கொடுத்ததை நீங்கள் புது போஸ்ட் போட்டவுடன் கமென்ட்டிடலம் என்றிருந்தேன். நீங்களே வந்ததற்கு நன்றி.

    @சி.பி.செந்தில்குமார்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. சார் இந்த படத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது, DVD கிடைக்க உதவ முடியுமா?

    ReplyDelete
  11. @முகப்பு
    என்னை சார்.னு எல்லாம் சொல்றது உண்மையிலேயே கூச்சமா இருக்கு.
    நண்பர்னு சொல்லுங்க.இல்லையினா பேரச் சொல்லுங்க.உலக திரைப்படங்களை நான் டவுன்லோட் செய்யுற சைட்ஐ பத்தி சீக்கிரம் ஒரு பதிவே போடறேன்.

    ReplyDelete
  12. ம்ம்ம்ம்ம் சினிமா பத்தி அதிகம் தெரியாது. உங்களுக்கு மதுரையா?? மாப்பிள்ளை விநாயகர் இன்னும் இருக்காரா மதுரையிலே??? நான் கேட்டது மாப்பிள்ளை விநாயகர் சோடா பத்தி! :)))))))))

    ReplyDelete
  13. நான் பார்த்த முதல் English movie உம First Blood தான். நானும் எனது நண்பர்குளும் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் நிறைய படம் பார்த்திருக்கிறோம்.

    நானும் மதுரைக்காரன் தான்.

    ReplyDelete
  14. @VELAN
    நண்பா..எனக்கு திண்டுக்கல்...

    ReplyDelete